" எதுக்குங்க எதுத்த வீட்டு அம்மா உங்களை திட்டிட்டுப்போகுது "
"அது ஒன்னும் இல்லைம்மா.... "
" ஒன்னுமில்லைனா தான் பெரிய பிரச்சனை இருக்குனு அர்த்தம் உண்மையை சொல்லுங்க"
"ஒரு பாட்டை மாத்தி பாடினு இருந்தேன் அவங்க தப்பா புரிஞ்சுகிட்டாங்க"
" பாத்தீங்களா கொஞ்சம் கொஞ்சமா உண்மை வெளியே வருது... சொல்லுங்க அவங்கள பாத்து கிண்டலா பாடினீங்களா....என்ன பாட்டு பாடினீங்க"
"அவள் அப்படி ஒன்றும் அழகில்லை ... "
"அதுக்கா அப்படி திட்டுனாங்க "
"அதுக்கில்ல "
"பின்ன ?"
"நான் மாத்தி பாடினி இருந்தேன்........ அவள் அப்படி ஒன்றும் அழுக்கில்லை ஏனோ அடிக்கடி குளிக்கவில்லை...."
மனைவி.... ????????.... அவங்க போற நேரத்துல இப்படி பாடினா திட்டாம என்னசெய்வா
சரி சரி வந்து சாப்பிட்டு தொலைங்க.........
கணவர்:- "சொல்லவும் முடியல மெல்லவும் முடியல...."
மனைவி:- " அப்படி என்னங்க பிரச்சனை சொல்லுங்க முடிஞ்சா நான் எல்ஃப் பண்றேன்"
கணவர்:- " நீ சுட்ட அடை தான் அப்படி இருக்கு "
மனைவி:- " அது அடை இல்ல தோசை...
கணவர் " மனதுக்குள்....... அடக்கடவுளே! தோசையா இப்படி இருக்கு இதை அடைனு சொன்னாலே யாரும் நம்ப மாட்டாங்க...
"திரும்ப என்ன யோசனை..."
"ஒன்னுமில்ல...."
மனைவி:- "என்னங்க சாஃப்ட்வேருக்கும் ஹார்ட்வேருக்கும் என்னா வித்தியாசம் பக்கத்து வீட்டு பங்கஜம் கேட்டாங்க"
" நீ சுடுற தோசைக்கும் அடைக்கும் உள்ள வித்தியாசம்"
மனைவி:- புரியிர மாதிரி சொல்லுங்க....
கணவர்:- " அது ரொம்ப சிம்பில்....அவங்க வீட்டுக்காரர் பூரிக்கட்டையால் அடிவாங்கிறதுக்கும் வாயால திட்டுவாங்கிறதுக்கும் உள்ள வித்தியாசம் தான்"
"புரியலியே.... "
உனக்கு புரிய வக்கிறதுக்குள்ள அடுத்த தோசை கண்டிப்பா தீஞ்சே போய் இருக்கும்....
கணவர் "சரி சரி தீஞ்சுபோன தோசை இருக்கா"
மனைவி தயக்கத்துடன் "ஏங்க இருக்கு...."
அத தூக்கி தூர வச்சிட்டு கொஞ்சம் நல்ல தோசையா ஒண்ணாவது போடு.....
பொருத்தமான ஜோடிதான்.
பதிலளிநீக்குவாழ்க நலம்...!
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஜோடி என்றால் ஜோடிதான்... படித்து மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நல்ல ஜோடி தான்...
பதிலளிநீக்குகடைசியில் தோசை இப்படியா[[[[[[[[[[[[[[[[
பதிலளிநீக்குஜோடி பொருத்தம் சூப்பர் !
பதிலளிநீக்கு"என்னங்க சாஃப்ட்வேருக்கும் ஹார்ட்வேருக்கும் என்னா வித்தியாசம் பக்கத்து வீட்டு பங்கஜம் கேட்டாங்க"
பதிலளிநீக்கு" நீ சுடுற தோசைக்கும் அடைக்கும் உள்ள வித்தியாசம்"/// ஹஹஹஹஹ் நல்ல ஜோடிங்க!!!! ரொம்பவே ரசித்தோம்!!