திங்கள், மார்ச் 30, 2015

கணவன் - மனைவி


" எதுக்குங்க எதுத்த வீட்டு அம்மா உங்களை திட்டிட்டுப்போகுது "

"அது ஒன்னும் இல்லைம்மா.... "

" ஒன்னுமில்லைனா தான் பெரிய பிரச்சனை இருக்குனு அர்த்தம் உண்மையை சொல்லுங்க"

"ஒரு பாட்டை மாத்தி பாடினு இருந்தேன் அவங்க தப்பா புரிஞ்சுகிட்டாங்க"

" பாத்தீங்களா கொஞ்சம் கொஞ்சமா உண்மை வெளியே வருது... சொல்லுங்க அவங்கள பாத்து கிண்டலா பாடினீங்களா....என்ன பாட்டு பாடினீங்க"


"அவள் அப்படி ஒன்றும் அழகில்லை ... "

"அதுக்கா அப்படி திட்டுனாங்க "

"அதுக்கில்ல "

"பின்ன ?"

"நான் மாத்தி பாடினி இருந்தேன்........ அவள் அப்படி ஒன்றும் அழுக்கில்லை ஏனோ அடிக்கடி குளிக்கவில்லை...."

மனைவி....  ????????.... அவங்க போற நேரத்துல இப்படி  பாடினா திட்டாம என்னசெய்வா

சரி சரி வந்து சாப்பிட்டு தொலைங்க.........


கணவர்:-  "சொல்லவும் முடியல மெல்லவும் முடியல...."


மனைவி:- " அப்படி என்னங்க பிரச்சனை சொல்லுங்க முடிஞ்சா நான் எல்ஃப் பண்றேன்"

கணவர்:- " நீ சுட்ட அடை தான் அப்படி இருக்கு "

மனைவி:- " அது அடை இல்ல தோசை...

கணவர் "  மனதுக்குள்....... அடக்கடவுளே!  தோசையா இப்படி இருக்கு  இதை அடைனு சொன்னாலே யாரும் நம்ப மாட்டாங்க...

"திரும்ப என்ன யோசனை..."

"ஒன்னுமில்ல...."

 மனைவி:- "என்னங்க  சாஃப்ட்வேருக்கும்  ஹார்ட்வேருக்கும் என்னா வித்தியாசம் பக்கத்து வீட்டு பங்கஜம் கேட்டாங்க"
" நீ சுடுற தோசைக்கும் அடைக்கும் உள்ள வித்தியாசம்"


மனைவி:- புரியிர மாதிரி சொல்லுங்க....கணவர்:-  "  அது ரொம்ப சிம்பில்....அவங்க வீட்டுக்காரர் பூரிக்கட்டையால் அடிவாங்கிறதுக்கும் வாயால திட்டுவாங்கிறதுக்கும் உள்ள வித்தியாசம் தான்"

"புரியலியே.... "

உனக்கு புரிய வக்கிறதுக்குள்ள அடுத்த தோசை கண்டிப்பா தீஞ்சே போய் இருக்கும்....

கணவர்  "சரி சரி தீஞ்சுபோன தோசை இருக்கா"

மனைவி   தயக்கத்துடன்  "ஏங்க  இருக்கு...."

அத தூக்கி தூர வச்சிட்டு கொஞ்சம் நல்ல தோசையா ஒண்ணாவது போடு.....7 கருத்துகள்:

 1. வணக்கம்

  ஜோடி என்றால் ஜோடிதான்... படித்து மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம2
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. "என்னங்க சாஃப்ட்வேருக்கும் ஹார்ட்வேருக்கும் என்னா வித்தியாசம் பக்கத்து வீட்டு பங்கஜம் கேட்டாங்க"
  " நீ சுடுற தோசைக்கும் அடைக்கும் உள்ள வித்தியாசம்"/// ஹஹஹஹஹ் நல்ல ஜோடிங்க!!!! ரொம்பவே ரசித்தோம்!!

  பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!