திங்கள், மார்ச் 23, 2015

நேயர் விருப்பம்
தொலைபேசியில் நேயர்கள் தொடர்புகொள்கிறார்கள்....
 
நேயர்:-“ உங்க புரோகிராம் எல்லாத்தையும் விடாம பார்ப்பேங்க நல்லா அருமையா இருக்கு புரோகிராம் பேரை மட்டும் மாத்திடுங்க....இன்னும் சூப்பரா இருக்கும் “

 சமையல்கலைஞர்:-“ என்னனு மாத்தறது.....? “

நேயர்:- “சமைச்சு சாப்பிடுங்க’னு இருக்கிற பேரை ‘சமைத்து பாருங்கள்’ அப்படினு மாத்தனும் “

சமையல்கலைஞர்:- “ஏன் ? ”

 நேயர்:-  "நீங்க சொல்றா மாதிரி சமைச்சா சாப்பிடறா மாதிரியா இருக்கு... சும்மா பாக்க தான் நல்லா இருக்கு அதான் "


சமையல்கலைஞர்:- "?????????"

................................................................................................................

நேயர்:-  “ ‘டங்கா மாரி ஊதாரி புட்டுக்கிட்ட நீ நாரி’ பாட்டு போடுங்க இன்னொரு தடவை கேட்கணும் “

“அந்த பாட்டு அவ்வளவு பிடிக்குமா?” 

நேயர்:- “இல்லீங்க பக்கத்து வீடுக்காரனோட சண்டை அதான் திட்டுறது நல்லதா நாலு வார்த்தை கேட்டு வச்சிக்கலாம்னு தான்...“

..........................................................

நேயர்:- “ சார் உங்க நாடகத்தை ராத்திரி 9 மணிக்கா போட முடியுமா? “

“ ஏங்க அப்பதான் உங்களுக்கு பார்க்க நேரம் கிடக்குமா? “

இல்ல காலையிலேயே போட்டுறீங்க... பார்க்க ஆரம்பிச்சதும் நல்லா தூங்கிடறேன் பகல்ல தூங்காதாதடி னு வீட்டுல திட்டுறாங்க... அதான் ராத்திரி 9 மணிக்கா போட்டீங்கனா நல்லா தூக்கம் வரும் பிரச்சனை இல்ல பாருங்க ”
டைரக்டர் :- “ ???? “
......................................................................

 நேயர்:- "  உங்க நாடகத்துக்கு நடுவுல இன்னும் கொஞ்சம் விளம்பரம் சேக்க முடியுமா ? " 

டைரக்டர்:- " ஏன் ?"

" நாடகத்தை விட விளம்பரங்கள் நல்லா இருக்கு அதான் "

டைரக்டர்:- " ????? "

4 கருத்துகள்:

 1. அனைத்தும் ஸூப்பர் நண்பரே அதிலும் கடைசி நினைத்து நினைத்து சிரிக்கின்றேன் நண்பரே...

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்
  கேள்வியும் பதிலும் அசத்தல் இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!