வெள்ளி, மார்ச் 13, 2015

வாராக்கடன்களும்...சாமானியர்களும்.



தொடர்வதற்கு முன் ஒவ்வொருவரும் உங்கள் மனசாட்சியுடன் சில நிமிடம் பேசிக்கொள்ளுங்கள். நமக்கு இருக்கும் கடன்தொகை எவ்வளவு? கடனை சரியாக செலுத்துகிறோமா? இல்லையா? செலுத்தவில்லையெனில் நேர்ந்தது என்ன?
பேசி முடிச்சிட்டீங்களா?.... இப்ப படிங்க.......

 ரு ஏழை விவசாயி பயிரிடுதல் நிமித்தம் ஒரு வங்கியில் கடன் கோருகிறார்... சரி எவ்வளவு நிலம் இருக்கு? நிலம் உன் பெயரில் இருக்க வேண்டும்.... பட்டா சிட்டா எல்லாம் எடுத்துவா... நகையின் பேரில் கிராமுக்கு 1950 ரூபாய் மட்டும் பெற்றுக்கொள்ளலாம். ஏகப்பட்ட கையொப்பங்களை பெற்றுக்கொண்டபின் கடன் வழங்கப்படுகிறது.நகையை வாங்கிக்கொண்டுதான் வழங்கப்படும்.  தொகை தங்க நகையின் மார்கெட் மதிப்பைவிட மிக குறைத்து மதிப்பிட்டு  வழங்கப்படுகிறது. இவர் வாங்கப்போவது மிக அதிகமாய் போனால் ஒரு லட்சமோ இரண்டு லட்சமோ?...........

ரு அரசு ஊழியர்..... வீடு கட்டவோ வாங்கவோ கடன் வாங்குவார். வாங்கியவர்களுத்தெரியும் அனுபவம். வீட்டுமனைப்பட்டா, ஊதியச்சான்று, ஜாமீன்கள், ஒரிஜினல் வீட்டுப்பத்திரம், கட்டப்போகும் வீட்டின் வரைபடம், கட்டிடப்பொறியாளர்களின் எஸ்டிமேட்,  வீட்டை வங்கியின் பேரில் பதிவுசெய்து தருதல்வேண்டும் இன்னும் பலப்பல. இவர் கோரப்போவது அதிகப்பட்சம் 15 லட்சம் வரையில் இருக்கலாம்.

கல்விக்கடன் வாங்குவது அதைவிட கடினம்.

சரி இவர்கள் ஏதோ சூழ்நிலையில் கடனை திருப்பிகட்டத்தவறுகிறார்கள். என்ன நடக்கிறது? நோட்டீஸ் மேல் நோட்டீஸ் வங்கி அதிகாரிகள் வீடு தேடி வந்து கட்டினால் ஆகாது என்று அடம்பிடிப்பர்.... கோர்ட்டில் கேஸ்...எல்லாவற்றிற்கும் மேலாக நகை ஏலம்,  வீடு ஜப்தி, ஏலம், சீல் வைப்பு...... அடித்துபிடித்து வாங்கிவிடுகிறார்கள்.
எத்தனையோ ஏழைகளின் நகைகள் மூழ்கிவிட்டது என்பர் எத்தனையோ வீடுகள் ஏலம் விடப்பட்டு உள்ளது..சிறு கம்பெனிகளை.... கம்பெனி அல்ல குடிசைத்தொழில் சீல் வைத்துவிட்டார்கள்.

14.3.2015 தினமலர் முதல் பக்கத்தில் வாராக்கடன் பற்றியும் அதனை திருப்பி செலுத்தாத நிறுவனங்கள் பற்றியும் வசூலிக்க புதிய யுக்தி பற்றியும் படித்திருப்பீர்கள்..எல்லாம் உலகம் அறிந்த பெரிய இடம்.   பாவம்!!!!! கடனை திரும்ப கட்ட முடியவில்லை. எல்லாம் கோடிகணக்கில், அவர்களிடன் ஏன் கிராமத்தானிடன் கேட்பதைப்போல் ஆதாரம் கேட்கவில்லையா? ஏதும் கேட்காமலேயே கடன் வழங்கினார்களா? ஏன் அதை திரும்ப பெறமுடியவில்லை?...ஜப்தி சீல் ஏலம் போன்ற நடவடிக்கை முடியவில்லையா? தடையாக இருப்பது எது ? இப்படி எத்தனையோ ???????.... மனதில் எழுகிறது.

கோடி கணக்கில் கடனை திரும்பக்கட்டாத பணமுதலைகள் கொழுத்தவண்ணம் தான் இருக்கின்றன....
வாயைக்கட்டி வயித்தைகட்டி விவசாயிகள் கட்டும் வட்டி பணத்தில்.


என் மச்சான் ஒருத்தன் சொன்னான் மாமா கொஞ்சமா கடன் வாங்கினா பேங்குல நம்மை மிரட்டுவாங்க, இதே அமௌண்ட் பெரிசா வாங்கி கட்டாம விட்டுப்பாரேன் அவன் நம்மை காலம் பூரா  கெஞ்சுவான்...கெஞ்சி பார்த்துட்டு வாரக்கடன்ல சேர்த்துடுவான்.....

மச்சான் புத்திசாலியோ ?............


இறுதியாக ஒன்று,

சட்டதிட்டங்கள் எல்லாம் சாமனியர்களுக்குத்தான்போலும்.

“ சட்டம் ஒரு இருட்டறை.... சட்டத்தில் ஆயிரம் ஓட்டைகள் இருக்கு...ஏழைக்கு ஒரு சட்டம் பணக்காரனுக்கு ஒரு சட்டம்.”
எல்லாம் உண்மை தானோ?..............

மதிப்புமிக்க இந்தியச்சட்டங்களே! வாராக்கடனுக்கு உன் பதில் என்ன?
  

10 கருத்துகள்:

  1. எல்லாமே லஞ்சப் பணம் செய்யும் லீலைகளே :)
    த ம 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாக ஒவ்வொரு நிறுவனமும் நூற்று கணக்கான கோடி கடன் வாங்கி கட்டாமல் இருக்கிறார்கள்....வீட்டுக்கடன் ஒரு நாள் தவறியதற்காக 200 ரூபாய் ஃபைன் போடுகிறார்கள்...
      காரணம் லஞ்சமோ?

      நீக்கு
  2. வணக்கம்

    மச்சான் சொன்ன ஐடியா சரியாத்தான் உள்ளது லஞ்சவாதிகள் இருக்கும் வரை இப்படியான சம்பவம் நடப்பது தடுக்கமுடியாது நியாயமான கேள்விகள் கேட்டு பதிவை எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 3

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். லஞ்சம் கொடுத்து தப்பித்துக்கொள்கிறார்கள். இதுவும் முக்கிய காரணம். மிக்க நன்றி.

      நீக்கு
  3. நண்பரே! எத்தனை எத்தனைப் பெரிய கம்பெனிகள் கடன் வாங்கி விட்டுக் கட்டாமல் இருக்கின்றார்கள்...அவர்களைக் கட்டச் சொல்லி ஆந்திரா வங்கி ஊழியர்கள் அந்தக் கம்பெனிகளின் முன் போராஅட்டம் நடத்துவதாகச் செய்தித்தாளில் செய்தி வந்துள்ளது. ஆனால் நாம் எல்லோரும் சாதாரண மக்களே! நாம் தான் மாட்டிக் கொள்வோம்...

    நல்ல கேள்விகள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அய்யா. ஆயிரம் கணக்கான கோடி ...........
      வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றிங்க.

      நீக்கு
  4. வங்கிக் கடன்களைப் பொறுத்தவரையில் நடைமுறை மற்றும் சட்ட திட்டங்கள் எல்லாக் கடன்களுக்கும் ஒரே மாதிரி இல்லை. கார்ப்பரேட் முதலாளிகள், பெரிய பணக்காரர்கள் வாங்கும் கடன்களுக்கு அவர்களுக்கு சாதகமாகவே உள்ளன. காரணம் இந்திய அரசியல்.

    எல்லாவற்றிற்கும் லஞ்சம் என்று பொதுவாக சொல்லி விட முடியாது. வங்கி தொழிற்சங்கங்களே, இது போல் பெரிய கடன்காரர்கள் பட்டியலை முழுமையாக வெளியிடச் சொல்லியும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லியும் போராடி வருகின்றன. ஆனால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை இதுவரை எந்த அரசும் எடுக்கவில்லை.

    த.ம.4

    பதிலளிநீக்கு
  5. அன்பின் அருந்தகையீர்!
    வணக்கம்!

    இன்றைய...
    வலைச் சரத்திற்கு,

    தங்களது
    தகுதி வாய்ந்த பதிவு
    சிறப்பு செய்துள்ளது!

    வருக!
    வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.fr/
    கருத்தினை தருக!

    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!