புதன், பிப்ரவரி 25, 2015

எடக்கு மடக்கு...மாமியார் உடைத்தால் மண்குடம்
மருமகள் உடைத்தால் பொன்குடம்.
இந்த மாமியார் மருமகள் தாங்க அப்படி, ஆனா மாமனார் மருமகன் யார் அந்த குடத்தில் இருந்து ஊற்றினாலும் ஒரே ‘தண்ணி’ (க்கு) தான். நம்ம ஒற்றுமை ஏன் அவங்களுக்கு வரவே மாட்டேங்குது.......

 ............................................................

சுத்தம் சோறு போடும்

அப்ப குழம்பு ரசம் ஊத்தரது யாரு?
....................................................................................


உணவே மருந்து

இதை ஒழுங்கா கடைபிடிக்காததால இப்பெல்லாம் மருந்தே தான் உணவு.
............................................................................................................................

தமிழுக்கு அமிழ்தென்று பேர்
அப்ப இங்கிலீஸ் இந்திக்கு எல்லாம் என்ன பேர் னு சொன்னா நல்லா இருக்கும்
................................................................................................................... 

ஊரான் பிள்ளையை 'ஊட்டி' வளர்த்தால் தன்பிள்ளை ‘தானே’ வளரும்.

தானே யில வளர்ந்தா நாம எப்படி அடிக்கடி பார்க்கிறது
அப்புறம் தம்பி பிள்ளையை 'கொடைக்கானல்' வளர்க்குமா?
...........................................................................................................................................
 
குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு.
விடிஞ்சதும் ஒரு கேள்வி கேப்பான் பாருங்க “நானா அப்படி பண்ணேன்”.
..................................................................................................................................
 
தர்மம் தலை காக்கும்
அப்ப மத்ததையெல்லாம் எது காக்கும்?

...........................................................................................................

மின்னுவதெல்லாம் பொன் அல்ல
வாஸ்துனு சொல்லி ஒரு கல்லை யானைவிலை குதிரைவிலையில விக்கிறானுங்க பாருங்க அந்த கல்லு இது மாதிரி தான்.
.......................................................................................................................
 
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
அப்ப மூஞ்சியின் அழகு கண்ணாடியில தான் பாத்து ஒழியணும் இல்லீங்களா? 

4 கருத்துகள்:

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!