செவ்வாய், பிப்ரவரி 24, 2015

எங்க போயி முட்டிக்கிறது....

கணவன் மனைவி உள்ளே வர்றாங்க

மனைவி “டாக்டர் அடிக்கடி வாந்தி வருது”

“ எப்ப எப்பனு சொல்ல முடியுமா?  “

“ அதான் சொன்னேனே அடிக்கடி...”


யோசித்துவிட்டு .................“வாழ்த்துக்கள் அம்மா ஆகப்போறீங்க“

“டாக்டர் ! வாந்தி எடுக்கிறது எங்க வீட்டுக்காரரு”

டாக்டர்:- ???

பேஷண்ட் யாருனே கேக்காம அவசரப்பட்டு ரிசல்ட சொல்லிட்டமோ? 
..........................................................................................................................

“ஏன்பா, நர்ஸ் அந்த பேஷண்டை இந்த அறை அறைஞ்சுட்டுப்போகுது ?”

பக்கத்தில் இருந்தவர்.  “ ’எண்ணெய்’ய தடவச்சொன்னா ‘என்னை’யா தடவுற னு அறைஞ்சுட்டு போறாங்க”


பின்ன அறையாம என்ன செய்வாங்க

...................................................................................................

“ டாக்டர் முட்டி வலிக்குது “

“ஏன்யா நீ போய் முட்டிக்கிற. முட்டாம இருந்து பாரு வலிக்காது “

பேஷண்ட்:- ??? “

டாக்டர் இப்படிச்சொன்னா ...............நாம  எங்க போயி முட்டிக்கிறது....


............................................................................................ “ என்னங்க தினமும் 3 தடவை மருந்து பாட்டிலை எடுத்து தடவி தடவி பார்த்துட்டு வக்கிறீங்க “

“ஆமாண்டி, டாக்டர் தான் தினமும் 3 வேளை மருந்தை தடவச்சொல்லி இருக்கார் “

மனைவி:-  “ ??? “


புண்ணுமேல தடவுனா இந்த புண்ணாக்கு மருந்து பாட்டிலை தடவினு உக்காந்து இருக்கு..... அப்புறம் டாக்டரை குறைச்சொல்லும்.......................................................................................................................................... 

12 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. தங்களின் பார்வைக்கு மிக்க நன்றிகள் அய்யா.

   நீக்கு
 2. வணக்கம்
  ஆகா..ஆகா... என்ன கற்பனை நல்ல கேள்விகள் தொடுத்து நகைச்சுவையாக மாலையாக்கிய விதம் நன்று த.ம 5
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 3. அருமை ,கமெண்ட்டும் நீங்களே சொல்லிட்டா ,நாங்க என்ன பண்றது :)
  த ம 6

  பதிலளிநீக்கு
 4. இன்றைய எனது பதிவில் நீங்கள் குறிப்பிட்டது உண்மை தான்... இன்று காலையிலிருந்து த ம வேலை செய்யவில்லை... இப்போது வேலை செய்வதாக சொன்னார்கள்... உங்களின் அடுத்த பதிவில் அது சரியா...? என்று பார்க்கிறேன்...

  பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!