ஞாயிறு, பிப்ரவரி 22, 2015

அப்பாடா....சாமி யோவ்....

"கும்பிடறேன் சாமி"
இருக்கடும் இருக்கட்டும் உன்பெயர் என்ன?"
" சாமிக்கண்ணு"
"உங்க அப்பா பெயர் என்ன?"
"கண்ணு சாமி"
"என்ன பிரச்சனை"
"என் பொண்ணு சாமி"
"என்ன ஆச்சு"
"பக்கத்து ஊரு சின்னசாமி......"

"புரியுது புரியுது அவன் அப்பன் பேரு என்ன ? “
“பெரியசாமி ....அதில்லீங்க சாமி.”
"சரி சரி......யோவ் அய்யாசாமி இவருக்கிட்ட என்னன்னு டீடெய்ல விசாரியா.."


"யோவ் இங்க வாயா...."
"வரேன் சாமி"
"என்னய்யா பிரச்சனை"
"பக்கத்து ஊரு அந்த பெரியசாமி மவன் சின்னசாமி..."
”அதான் அங்க சொன்னியே கேட்டுனு தான் இருந்தேன் மேல சொல்லு”
"அவன் வந்து சாமி..."
 " என்னய்யா எல்லாத்துக்கும் சாமி போடற நீ என்னை சொல்றீயா இல்ல ஆளுங்க பேரைச்சொல்றியானே புரியமாட்டேங்குது.."
'இது உண்மையாலும் சாமிங்க..."
"என்னய்யா குழப்பறே..."
"அதாங்க அந்த சின்னசாமி என்ன பண்ணான்னா என் மக கோவிலுக்கு போகும்போது...."
“யோவ் துரைச்சாமி போய் டீ வாங்கினு வாய்யா”...
“இப்ப சொல்லு....”
"சின்னசாமி ரத்தினசாமி முனுசாமி மூனு பேரும் ..."
"ஏட்டய்யா உங்களப்பாக்க ராமசாமி வந்து இருக்கார்..."
"இருப்பா தோ வந்திடறேன்."
.........
.............................
.............................................


மூனுசாமியும் என்ன பண்ணுச்சி சீக்கிரம் சொல்லுயா...
மூனுசாமி இல்லீங்க முனுசாமி...
அட அதான்யா அந்த மூனு பேரையும் சேர்த்து அப்படிச்சொன்னேன் நீ சொல்லு..
அதாங்க அந்த கருப்பச்சாமி கோவில்ல....
யோவ் துரைசாமி, வீராசாமி வந்திட்டாறாயா...
இன்னும் இல்லீங்க
"வந்தா சங்கர் சாமி கூப்பிட்டார்னு சொல்லு"
"என்னங்க சங்கரை போயி சாமி னு சொல்றீங்க"
"அட அவரு நேத்து தான்யா ஐயப்பன் சாமிக்கு மாலை போட்டார்"
ஓ அப்படிங்களா’’’
சரி, இப்ப என்ன ஆச்சு உன் பொண்ணை கடத்தினு போயிட்டாங்களா?
அய்யய்யோ அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்க சாமி...
அவங்க கடத்தினு போனது அந்த கருப்பசாமி சிலை யை அதை என் பொண்ணு பார்த்துட்டு வந்து சொன்னா... நீங்க தப்பா புரிஞ்சிகிட்டீங்க....சாமியை எப்படியாவது நீங்க தான் காப்பாத்தி தரணும்.

...........................................................................................................


11 கருத்துகள்:

 1. வணக்கம்

  இரசிக்கவைக்கும் நகைச்சுவை கேள்வி பதில் அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி த.ம 2
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சாமி முத்தான கருத்துரை இட்டமைக்கும் வாக்களிப்பிற்கும்.

   நீக்கு
 2. சாமி சாமி
  அடுத்த பதிவில் சந்திப்போம் சாமி
  தம +1

  பதிலளிநீக்கு
 3. கேள்வியும், பதிலும் நகைச்சுவையாக இருப்பது மிக அருமை. நீங்களும் எனது வலைப்பூவின் உறுப்பினராகி தொடர்ந்து கருத்துக்களை சொல்லுங்கள் சகோ.

  பதிலளிநீக்கு
 4. சாமியோவ்!!!! சாமிங்க படுத்தற பாடு தாங்கலப்பா சாமியோவ்! ஹஹஹஹ அருமை நண்பரே!

  பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!