சனி, பிப்ரவரி 21, 2015

பேச்சு பேச்சா இருக்கனும்...


உலகத்திலேயே ரொம்ப ரொம்ப கஷ்டமான விஷயங்களில் இதுவும் ஒன்று. 


கொஞ்சம் யோசிச்சு வையுங்களேன்... நான் சொல்றதும் நீங்க நினைச்சதும் ஒன்னா இருந்தா.... நம்ம ரெண்டுபேருக்கும் ஒரு சபாஷ்... இல்லைனா... நான் எழுதியதை படித்தே ஆகவேண்டும்/ என்ன பண்றது எனக்கு வேற வேலையில்லை உங்க கூட பேசறத தவிர. நான் பட்ட கஷ்டத்தை நீங்க படக்கூடாது அல்லது நீங்க யாருக்கும் கொடுக்க கூடாது.... அது போதும் எனக்கு.

சிலர் ஏன்டா இவங்கிட்ட மாட்டினோம்னு நொந்து கொள்ளும் அளவுக்கு இருக்கும் அப்படி நடந்துக்கொள்வார்கள்.


ஒரு நண்பர் புதுசா கடை வச்சிருக்கேன் வந்து பாருங்க என்றார். சென்று சுற்றி பார்த்துவிட்டு சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்து விட்டு கிளம்பும் தருவாயில் கேட்டார். “கடைஎப்படி இருக்கு?” “சூப்பரா இருக்கு என்ன கொஞ்சம் கொஞ்சம் மாற்றங்கள் செய்தால் போதும் மற்றபடி அருமையா இருக்கு” என்றேன்.... "அப்படியா என்ன செய்யலாம்?" என்றார் நான் கூறியதை கேட்டு "அப்படியா நான்யோசிக்கவே இல்ல.... கண்டிப்பா செய்யனும்" என ஏறுக்கொண்டார்.

என்னைப்போல் மற்றொரு நண்பர் கூறிய கருத்தை உடனே மறுத்த அவர், அவர்மேல் கடுப்பாகிப்போனார்... என்னிடம் தனியாக “இவனுக்கு என்னா தெரியும் சும்மா பிரண்டுனு கூப்பிட்டேன்....வந்து அப்படி இப்படி என்று அளக்கிறான் எனக்குத்தெரியாதா எப்படிச்செய்யனும்னு....?” என்று ‘பேச’ ஆரம்பித்துவிட்டார்.

அந்த நண்பர் செய்த தவறு.....
அவர் நேரிடயாகவே விமர்சிக்க ஆரம்பித்துவிட்டார் அப்படி இப்படி அதை செய் இதைச்செய் என்று.

எனக்கு அப்பொழுதுதான் புரிந்தது எதையும் நாசுக்காக சொல்ல வேண்டும்..

நல்ல காலம் நான் தப்பித்தேன் இல்லையென்றால் என்னைப்பற்றியும் அப்படித்தான் அடுத்தவரிடம் சொல்லி இருப்பார்.

ஆகவே அன்புத்தோழமைகளே நீங்கள் உயர்ந்த அல்லது சராசரி அல்லது கடைநிலை அல்லது உற்றார் உறவினர் அல்லது நண்பர் இப்படி யாராக இருந்தாலும் எவரிடத்திலும் எதையும் நாசுக்காக சொல்லுங்கள். கேட்காதாவர்கள் கூட கண்டிப்பாக கேட்டுக்கொள்வார்கள்.

நான் சொல்ல நினைச்சதே வேற.... 

உலகத்திலேயே ரொம்ப ரொம்ப கஷ்டமான விஷயங்களில் இதுவும் ஒன்று. இதைதான் சொல்ல வந்தேன். அது என்ன யோசிச்சீங்களா?

சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லுவதை கேட்டல் தான் உலக மகா கஷ்டம்...

அந்த தப்பை மட்டும் நீங்க செய்யாதீங்க... ரொம்ப முக்கியமான விஷயம் அப்படி இப்படி என்று எந்த அதிமுக்கியமான காரியம் ஆனாலும் சரி.....ஒன்று இரண்டு முறைக்குமேல் சொல்லாதீர்கள்.அப்படிச்சொன்னால் அதை கேட்பவர் ரொம்பவே நொந்து போவார்.  அது அவர்களை எரிச்சல் அடையச்செய்யும்.. சலிப்படையச்செய்யும் உங்களுக்கு எதிராகவே திருப்பிவிடும் எதிர்மாறாக செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்...ஆமா அவரு அப்படித்தான் எதுக்கெடுத்தாலும் குதிப்பார், நூறு தடவை சொல்லுவார், அப்படி என்று அதைவிட மகா பட்டம் 'அறுவை'.
அதிகமுறை சொன்னால் நீங்கள் உடனே நடக்குமென்று நினைத்தது  நிறைவேறாமலேயே போகலாம். ஆகவே... 

நானும் அதிகமுறை சொல்ல விரும்பவில்லை... புரிஞ்சுடுச்சீங்களா?.

சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லாதீர்கள்.

ஏன்னா.....................அனுபவம் அப்படி!.

11 கருத்துகள்:

  1. 1.சொன்னதையே திரும்பத்திரும்ப சொல்லாதீங்க
    2.சொன்னதையே திரும்பத்திரும்ப சொல்லாதீங்க
    3.சொன்னதையே திரும்பத்திரும்ப சொல்லாதீங்க
    4.சொன்னதையே திரும்பத்திரும்ப சொல்லாதீங்க
    5.சொன்னதையே திரும்பத்திரும்ப சொல்லாதீங்க

    மன்னிச்சுடுங்க. நான் ஐந்து தடவைக்கு மேல் எதையும் சொல்றதில்லீங்க. எதாச்சும் தப்புங்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தப்பு எதுவும் இல்லீங்க அய்யா.... சிலருக்கு இப்படியும் சொல்லனும்போல.... தங்கள் வருகை குறித்து மிக்க மகிழ்ச்சி.

      நீக்கு
    2. ஹஹஹஹஹ்ஹ பழனி. கந்தசாமி ஐயா உங்கள் பின்னூட்டத்தை மிகவும் ரசித்தோம்....

      நீக்கு
  2. நம் மனதிடம் பலவற்றை (நல்லவைகளை) பலதடவை சொல்லியே ஆக வேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது நிச்சய உண்மையான மனோதத்துவம்..... மிக்க நன்றிங்க.

      நீக்கு
  3. நானும் சொல்லிட்டேன்....
    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க சொல்லிட்டீங்க.. உங்க ஏன் என்ற கேள்விக்கு என்னால சொல்ல பதில் சொல்ல முடியல. மிக்க நன்றி....

      நீக்கு
  4. #சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லாதீர்கள்.#
    யாருக்கு புரிந்ததோ இல்லையோ எனக்கு புரிந்தது ,நான் புரிந்து கொண்டதை நீங்களும் புரிந்து கொண்டு விட்டீர்கள் என்பதை நானும் புரிந்து கொண்டேன் என்பதற்கு சாட்சியா இதோ ஏன் தமிழ்மண வாக்கு +4

    பதிலளிநீக்கு
  5. சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லாதீர்கள்//

    ஹஹஹ் அது சரி அப்படிச் சொன்னா அது ஒரு வியாதினு ஆகிடும்.....இது ஓகே....ஆனா தமிழ் மண வாக்கு திரும்பத் திரும்ப போட முடியலையே!......ஹஹஹ்

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!