சனி, பிப்ரவரி 28, 2015

குறுங்கவிதைகள்குறுங்கவிதைகள்
ஆன்மீகம்

அக்கிரமம் அராஜகத்தை அடக்க
ஆன்றோர்களின்
அகிம்சை மொழி -
‘சாமி கண்ணைக் குத்தும்’.
............00000...........................
காசு பணம் துட்டு மனி

உள்ளங்களில்
அமிலங்களை ஊற்றி
உணர்வுகளில்
உலோகத்தன்மையை
உருவாக்கி வருகிறது
பாழாய் போன பணமும் பதவியும்.
.............................................................................
என்ன பயன்?
முகநூல் சொந்தங்களின்
கணக்கு பார்த்தான்....
அண்டை வீட்டினருடன்
போட்ட
சண்டைக்குப்பின்.5 கருத்துகள்:

 1. சாமி கண்ணை குத்தும் , குத்தினமாதிரி தெரியலியே :)
  த ம 3

  பதிலளிநீக்கு
 2. குறுங்கவி அருமை நண்பா...
  தமிழ் மணம் 5

  பதிலளிநீக்கு
 3. அருமை நண்பரே!அதுவும் அந்த கடைசி ....செம! என்ன பயன்!? இது எல்லாவற்றிற்கும்! ம்ம்ம் அப்படியாகிப் போனது சமூகம் என்ன நாம் உரைத்தாலும் செவிடன் காதில் சங்கு...

  பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!