வியாழன், பிப்ரவரி 19, 2015

நான் வியந்த பழமொழிகள்...



ழமொழிகள் என்பது முன்னோர்கள் தங்களின் அனுவத்தில் ஆராய்ந்து கூறிய அனுபவமொழிகள் ஆகும். எல்லாவற்றையும் விளக்கமாக கூறி புரிந்துக்கொள்ளசெய்ய வேண்டியதில்லை அவ்வளவு புத்திசாலிகளாக நமது முன்னோர்கள் இருந்திருப்பார்கள் என்றே எண்ணத்தோன்றுகிறது.. 


இதற்கு சிறந்த உதாரணம்... ஆத்திச்சூடியும், திருக்குறளும் என்றால் மிகையாகாது. ஏனென்றால் ஒற்றை வரியிலும் இரட்டை வரியிலும் எவ்வளவு அற்புதமான கருத்துக்களை உள்ளடக்கிச்சொல்லியுள்ளார்கள்....செய்யுள் பகுதிகள்... அப்பப்பா..!!!
ஆனால் நமக்கு இன்று அவற்றை நாம் புரிந்துக்கொள்ள விளக்க உரை நூல்கள் தேவைப்படுகிறது.......எங்கேப்போனது அந்த பரம்பரைமூளை.


சரி.....அதவிடுங்க....

பழமொழிகளில் 4 என்ற எண்ணை அடிக்கடி பயன்படுத்தியுள்ளார்கள்... “நாலுபேருக்கு நல்லது செய்”, “நாலும் தெரிந்து பேசு”, “நாலும் புரிந்து நட”.....இப்படி பல பழமொழிகள் உள்ளன.

 யார் அந்த 4பேர்?.....எது அந்த நான்கு?.....

4 பேர் எளிதில் புரிந்து விடும். இறந்தவரை இறுதி ஊர்வலத்தில் சுமந்துச்செல்ல அவசியம் 4பேர்களாவது தேவை. அந்த காலத்தில் பாடையை நான்குபுறமும் பிடித்து தூக்கிச்செல்வதுதானே வழக்கத்தில் இருந்தது...அதனால் அந்த 4 பேர்....புரிந்துவிட்டது. நாலுபேருக்கு மேல் எவ்வளவு கூடுகிறதோ அவர்கள் செய்த பாவ புண்ணியங்களைப்பொருத்து அமையும்....
 
இதுவல்ல எனது கேள்வி... அடுத்த 4 எது ...... ?

‘நாலும் தெரிந்துபேசு’....’ நாலும் புரிந்து நட’ என்பதே.
எனக்கு தெரிந்தவகையில் அந்த 4 இதுவாக இருக்குமோ.??????

1.நல்லது.
2.கெட்டது. 
3.வரவு.
4.செலவு.

இதுவாக இருக்கலாமோ என்ற சந்தேகம் தான். உண்மையில் இது இல்லாமலும் இருக்கலாம்.

 உங்களுத்தெரிந்திருப்பின் தயவுச்செய்து அனைவரும் அறிந்துக்கொள்ளும்படி தெரிவியுங்கள்.

எல்லா செயல்களுடனும் இதனைப்பொருத்திப்பார்த்தால் எனக்கு ஏறக்குறைய சரியாக வருகிறது.

உதாரணமாக.... ஒருசெயலைச்செய்யப்போகிறோம்....ஒரு கம்பெனியை வாங்கப்போகிறோம்.... ஒரு பொருளை வாங்கப்போகிறோம்... விற்கப்போகிறோம்.... இப்படி எது வேண்டுமானாலும் இருக்கலாம்.
அந்தச்செயலால் நமக்கும் பிறர்க்கும்
நல்லதா...?
கெட்டதா.................?
அதனால்
வரவா.....? அல்லது, செலவா.... ?

இந்த 4 விஷயங்களை ஆராய்ந்தால் அந்த செயல் மேண்மை அடைந்துவிடும்....

என்பதாக எனக்குப்படுகிறது. எப்படி இருக்குங்க...?. 

உங்களுக்கு எப்படியோ?....

முன்னோர்களின் ஒருவரியை வைத்துக்கொண்டு ஒரு ஆராய்ச்சியே பண்ணலாம் போல இருக்கு......

நீங்களும் ஆராய்ந்து சொல்லுங்களேன், பின்னர் ஒரு சரியான விடையை தேர்ந்தெடுப்போம்.

இறுதியாக....
 நாலு பேருக்கு நன்றி ....
 யார் இந்த 4 பேர்... ?
ஹி ஹி ஹி.... இதை வாசிக்கிற நீங்க தாங்க. 

13 கருத்துகள்:

  1. அருமை நண்பரே புதுமையான விடயத்தை தந்தமைக்கு நன்றி தாங்கள் சொல்வது பொருந்தக்கூடிய உண்மையே....
    அநத 4 பேரில் நான் முதல் ஆள் ஹி ஹி ஹி
    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. முதல் வணக்கமும் நன்றியும் உமக்கே உரித்தாக்குகிறேன்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களின் வருகை மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.... நன்றிகள் பல

      நீக்கு
  3. பதில்கள்
    1. ஆயுத எழுத்தில் அத்தனை புள்ளிகளும் சமம் தானே....
      மிக்க நன்றிங்க அய்யா.

      நீக்கு
  4. நான் நான்காவது வால்...சாரி ..ஆள் !
    நாலு நபர் நாலு விதமா சொல்லுவாங்க ,எதைக் கணக்கில் எடுத்துக்கிறது :)
    த ம வும் நாலுதான்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 4பேரு 4 விதமா சொன்னாலும் நீங்க சொல்றதும் முக்கியம் "தல".
      வாலுக்கு ஆப்போசிட்.

      நீக்கு
  5. அருமையான பதிவு ! எனது நேற்றய பதிவு அபியும் நானும் !!!

    www.saratharecipe.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்றே வாசித்தேங்க... நீங்களும் அபியும் விடுமுறையை கொண்டாடிய விதத்தை......அருமை..தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

      நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!