செவ்வாய், பிப்ரவரி 17, 2015

சிவராத்திரி ஸ்பெஷல் “அத்திரிபச்சா”....



ரு ஊர்ல ஒரு ஆளு இருந்தான் கொஞ்சம் விவரம் கம்மி...கூடவே ஞாபகமறதி அதிகம்...
அவனுக்கு கல்யாணம் ஆகியது...

 

அவனுடைய மாமியார் வீடு ரெண்டு ஊருக்கு அப்பால் இருந்தது... குறுக்குவழியால நடந்தே போய்விட்டு வருவான்....
அப்படி இருக்கும் போது  ஒரு நாள் கொஞ்சம் பொருட்களை மனைவி அவங்க அம்மா வீட்டுக்கு கொடுத்தனுப்பினாள்..... பத்திரமா கொடுத்துட்டு வாங்க பலமுறை சொல்லி அனுப்பி வைத்தாள்..
மாப்பிள்ளையும் பத்திரமா ஊர் போய் சேர்ந்தார்...

மாப்பிள்ளை வந்து இருக்கார். மாமியார் வீட்டுல நல்லா கவனிச்சாங்க... அன்னைக்கு சிவராத்திரி, அதனால் கொழுகட்டை முதலிய பலகாரங்களுடன் தடபுடலா விருந்து வச்சி சாப்பாடு போட்டாங்க....

மாப்பிள்ளைக்கு கொழுகட்டை ரொம்ப பிடிச்சு இருந்தது...அதிகம்கேட்டுவாங்கி சாப்பிட வெட்கமாக இருந்தது......அதன் பேர மட்டும் கேட்டுக்கிட்டான். மனசுக்குள்ள வீட்டுக்கு போனதும் பொண்டாட்டிக்கிட்ட கொழுகட்டை செய்யச்சொல்லி ஒருபிடி பிடிக்கனும் அப்படினு நினைச்சுக்கினு கிளம்பினான்.
கொழுகட்டை பேரை மறந்துடக்கூடாதுனு நினைச்சு “கொழுகட்டை.... கொழுகட்டை” அப்படினு வழியில் வரும்போது மெதுவா சொல்லிக்கொண்டே வந்தான்.....


வரும் வழியில ஒரு ஓடை...
அங்கே சில பசங்க ஓடையை அந்தப்பக்கத்தில் இருந்து இந்தப்பக்கமும் இந்தப்பக்கத்திலிருந்து அந்த பக்கமுமாக தாண்டி தாண்டி குதித்து “அத்திரிபச்சா அத்திரிபச்சா” அப்படினு சொல்லிசொல்லி குதித்து விளையாடிக்கொண்டிருந்தார்கள்.... பாக்க பாக்க ஜாலியா இருந்தது... இந்த ஜோர்ல கொழுகட்டை பேரை மறந்துவிட்டு “அத்திரிபச்சா அத்திரிபச்சா” அப்படினு சொல்லிக்கிட்டே வீடு வந்து சேர்ந்தான்.

ஊர் சேதி...விவரம் எல்லாம் சொல்லிவிட்டு உங்க அம்மா 'அத்திரிபச்சா' செஞ்சி கொடுத்தாங்க ரொம்ப நல்லா இருந்தது அதை எனக்கு செய்து தா என்று கேட்டான். 

அவளுக்கு ஒண்ணும் புரியல.. “அது என்ன அத்திரிபச்சா....?”

இவனும், இவனுக்கு தெரிந்த விவரங்களை வைத்து கூறினான்...
“அட கூறுகெட்ட மனுசா.... என்னன்னு ஒழுங்கா சொல்லித்தொலை..”

“அதாண்டி அத்திரிபச்சா.. உங்க அம்மா எவ்ளோ டேஸ்டா செய்றாங்க ...உனக்கு அது பேரே விளங்கல... உன்னை எனக்கு கட்டி வச்சாங்கா பாரு”

“ஆமா நீ ரொம்ப விவரமான ஆளு, எங்க அப்பன் ஆத்தாளை சொல்லணும்.....உனக்கு போயி என்னை கட்டிவச்சாங்கப்பாரு..”


வாய் சண்டை முற்றி... கைச்சண்டையாக மாறியது... கோபத்தில் இவன் அடிக்க...அவ பக்கத்தில் கிடந்த பூரி கட்டையால முதுகுல நல்லா மொத்து மொத்துனு மொத்திட்டா...

கொஞ்ச நேரம் கழித்து... அவளுக்கு பாவமாக இருந்தது... இப்படி பண்ணிபுட்டேமே...

 கணவன் படுத்திருக்க மெத்துவா கிட்ட போயி பேச்சுக்கொடுத்தாள்... உடம்பை பார்த்தவ... அய்யய்யோ மன்னிச்சுக்கோங்க... இப்படி கொழுகட்டை மாதிரி வீங்கி போச்சே....அப்படினு ஆறுதல் சொன்னாள்..
“ஏய் இப்ப என்ன சொன்ன.....”

“கொழுகட்டை மாதிரி வீங்கி போச்சு ஒத்தடம் கொடுக்கிறேன்...”

“அதாண்டி கொழுகட்டை ...அது தான் செய்யச்சொன்னேன்...”

கொஞ்சும் மொழியில் ....."அட கூறுகெட்ட குப்பா இத மொதல்லே ஒழுங்கா சொல்லி தொலைக்க கூடாதா?.....”

அசடு வழிந்த கணவன்.... சிரிக்க...


 

 அன்னையில இருந்து அவன் சிவராத்திரியையும் மறக்கல கொழுகட்டை பேரையும் மறக்கவே இல்ல.... 
  

7 கருத்துகள்:

  1. ஸூப்பர் கொழுக்கட்டை நண்பரே...
    எனது பதிவு அ.அ.அ.
    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
  2. கொழுக்கட்டை செய்து கொடுத்தாங்களா இல்லையா :)
    த ம 4

    பதிலளிநீக்கு
  3. கொழுக்கட்டை செய்து கொடுத்தாங்களா இல்லையா :)
    த ம 4

    பதிலளிநீக்கு
  4. பாவமா இருக்குங்க... ஜி - யின் சிந்தனை தான் எனக்கும்...!

    பதிலளிநீக்கு
  5. மிகவும் இரசித்தேன்
    சொல்லிச் சென்ற விதம் கூடுதல் சிறப்பு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!