வெள்ளி, பிப்ரவரி 13, 2015

'தல' ஆன கதை....நம்ம ஆளுங்க பிப்ரவரி 14 ந்தேதி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து எல்லா நிகழ்ச்சிகளையும் சிறப்பிக்கிறாங்க......

கெஜ்ரிவால் பதவியேற்பு விழா..... கிரிக்கெட் மேட்ச்.....அப்புறம் காதலர் தினம்....

மொதல்ல ....கெஜ்ரிவால் பதவியேற்பு...

நமஸ்தே  டெல்லி வாலாஜீஸ்.... கைசா..ஹை...? துமாரா.. ஆம் ஆத்மி சோட்டா கட்சி.... ஆனா படா வெற்றி வாங்கி இருக்கு...

ஆமா உங்க முகம் ஏன் வீங்கி இருக்கு?” டேய் குறுக்கே பேசாதே இந்தி மறந்திடும்....


இந்தி ரொம்ப தெரிஞ்சா மாதிரி சொல்றீங்க,  நீங்க பேசுறது இந்தினு சொன்னா டெல்லிக்காரன் கல்லாலே அடிக்க வருவான்.....

 அடிச்சியும் புட்டானா? அதான் முகம் வீங்கி இருக்கு.
 அது அடிச்சதால இல்லடா...._டிச்சதால....
ச்சீ... இடிச்சதால......

அப்புறம் தமிழ்லேயே பேசுங்க அப்பதான் அவங்களுக்கும் ஒண்ணும்புரியாது.... அடிக்க மாட்டாங்க நாம சொல்றது புரிஞ்சதுனா தொடப்பக்கட்டை பிஞ்சுக்கும்.... 

மனதுக்குள்...நாம பேசுறது என்னன்னு நமக்கே புரியாது...ஹ ஹா ஹா......

அடேய் ஒபாமாவே இந்தியில பேசுனாரு நான் பேசக்கூடாதா...?

அவர ஒண்ணும் பண்ணமுடியாதுணே நாம அப்படியா..... 

நம்மல எங்கடா இந்தி படிக்க விட்டானுங்க.... போராட்டம் போராட்டமா நடத்தி..... படிக்கவிடாம பண்ணிபுட்டாங்களே...
இந்தியும் தெரியல இங்கிலிபீசும் தெரியல..... நாம எப்படி மத்தியில ஆட்சிக்கு வர்ரது......ஜெயிச்சாலும் ஒண்ணும் பண்ணமுடியாது போலகீதே.......

ஆமாண்ணே....மொதல்ல தமிழ்ல தான்  எல்லாமும்னு மாத்திபுடணும்ணே... நமக்கு தெரிஞ்சதெல்லாம் அது மட்டும்தானே.... 

அடேய் அதுக்கு தான் இந்தி வார்த்தையை தமிழ்ல எழுதி மனப்பாடம் பண்ணிட்டு வந்தேன்...

அய்யய்யோ நான் தான் தப்பா புரிஞ்சுகிட்டேன் ஏதோ போதையில உளர்றீங்கனு நினைச்சுபுட்டேன் மன்னிச்சுக்கோங்கண்ணே...
இதெல்லாம் இருக்கட்டும் நம்ம நிலவரம் இடைத்தேர்தல்ல நாறிக்கிட்டு இருக்கு..

 வால் தலையான கதையை மட்டும் கூறி  உரையை முடிச்சிக்கோங்க...
நீங்க தானே அதை சொல்லப்போறதா சொன்னீங்க அது என்ன வால் தல ஆன கதை?

அங்க பாரு எவனோ காங்கிரஸ் கொடியை குறுக்கால காட்டறான் அவனை பிடிங்க....அப்புறம் அவங்க கூட கூட்டணி பேச முடியாம போயிடப்போது......

மோடியையும் பேடியையும் தல தெரிக்க ஓடிப்போகச்செய்த அன்புத்தம்பி கேசரிவால் அவர்களே...

அய்யோ அது கேசரிவால் இல்லண்ணே கெஜ்ரிவால் ....

பளார் அறை விழுகிறது அது எனக்கு தெரியாதா....

கேசரி போன்று இனிப்பான கெஜ்ரிவால் அவர்களே....நாங்கள்ளாம் எப்படி சம்மாளிப்போம்னு எங்களுக்கே தெரியாது......

ஜெயித்த எம் எல் ஏ வுக்கே இந்த அடியா?  

அட அதை விடுங்க சீக்கிரம் கதையை சொல்லி முடியுங்க
அட... நம்ம கெஜ்ரி வால் மு தல மைச்சர் ஆனக்கதையை தான் அப்படி சொன்னேன்

ஆகவே அன்பு கெஜ்ரிவால் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு அடுத்தமுறை எங்கள் கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டுமாய் அன்புடனும் பண்புடனும் பாசத்துடனும்  கேட்டுக்கொண்டு விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.வந்தனம்  நமஸ்தே... நமஸ்கார்....அப்புறம் ஏதாவது சொல்லணுமா?..............................

ஏண்ணே அவங்களாவது ஜெயிச்சி,,, ஜெயிச்சி ஆட்சிக்கு வந்தது உங்களுக்கு பிடிக்கலையா..?...

நீங்க எதுவும் சொல்ல வாணாம் சீக்கிரம் இறங்கி வாங்க......

அப்புறம் அந்த தம்பிஅசாரே வை பாத்து நாமலும் அவரு சீடராயிடனும்...
அண்ணே அவரு அன்னாஅசாரே..
ஏண்டா அவருக்குதான் கெஜ்ரிவால்.... அதனால அவரோட தம்பி யாராவது இருந்த அவரை நமக்கு குருவா  மாத்திடணும்...
அய்யோ ...அய்யோ........ 

 
அடேய் அங்க பாரு இங்கியும் யாரோ ரெட்டைஇலை க்கு ஓட்டு கேட்கறாங்க
அண்ணே அது v எழுத்தை குறிக்கும் ‘வி’  ஃபார் ‘விக்டரி’.....

அது என்ன விக்டரியோ பேக்ட்டரியோ.... அடேய் அடுத்து அந்த கிரி வெள்ளாண்ட கட்ட விளையாட்டு போட்டியை எப்ப பாக்கப்போறோம்....
அது கிரி கட்ட இல்ல கிரிக்கெட்....  இங்க கடை டைமே நமக்கு தெரியாது மூடிடப்போறாங்க...அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்.....
டெல்லியில என்னா குளிரு........எப்படியாவது......முதல்ல குடிச்சிட்டு....