புதன், ஜனவரி 28, 2015

ரெண்டு பேர்ல யார் நல்லவர்....தலைவருக்கு சரக்கு அடிக்கிற நேரம் ஞாபகம் வந்திடுச்சி போல

எதை வச்சி சொல்ற

கா’ரம்’ சா’ரம்’ மா பேசிக்கொண்டி இருந்தவர் நே’ரம்’ ஆகிவிட்டது..... நே’ரம்’ ஆகிவிட்டபடியால் அப்படினு திரும்ப திரும்ப சொல்றாரே...

???......

...........................................................................
ரெண்டு பேர்ல யார் நல்லவர்....

"நான் கிழிச்ச கோட்டை என் கணவர் தாண்டவே மாட்டார்"

"ஹூம் இது என்ன பிரமாதம் என் கணவர் நான் சொல்ற இடத்துல தான் கோடே கிழிப்பார்'

' ??? "
....................................................................

" என்ன மாப்ள உங்க வீட்டுல நேத்து செம 'கவனிப்பா' ? "

"எப்படிடா கண்டுபிடிச்ச... முகத்துல ஏதாவது காயம் தெரியுதா?"

"இல்லடா நேத்து ராத்திரி உங்க வீட்டுல ரொம்ப சத்தமா டிவி ஓடும் போதே கண்டுபிடிச்சிட்டேன்"
" ??? "
......................................................................................................................................................

5 கருத்துகள்:

 1. #ரொம்ப சத்தமா டிவி #
  இதிலே இவ்வளவு வில்லங்கம் இருக்கா :)
  த ம 1

  பதிலளிநீக்கு
 2. அந்த கடைசி இரண்டும் அருமை. சொந்த சோகக்கதை எல்லாம் இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா வெளியே வருது போல...

  பதிலளிநீக்கு
 3. சொந்த அனுபவம் பேசுகிறதோ!!! (இதுதானேங்க எல்லார் வீட்டிலயும் நு நீங்க சொல்றது..காதுல விழலைங்க டிவி சத்தம் பெரிசா இருக்கே....

  பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!