திங்கள், டிசம்பர் 08, 2014

மெசேஜ் செண்டிங் பெயில்ட்.

"ஏன்டா மாப்ள செல்போன்ல மெசேஜ் அனுப்புனா அதை யாராவது பரிட்சை பேப்பர் மாதிரி திருத்தி அப்புறம் தான் அனுப்புவாங்கனு நினைக்கிறேன் "


" அப்படி ஏன்டா சொல்றே ""நேத்து உனக்கு நிறைய தடவை மெசேஜ் அனுப்பி அனுப்பி பாக்கிறேன்  மெசேஜ் செண்டிங் பெயில்ட் அப்படி னு வருது மாப்ளே. அப்புறம் தான் எந்த புண்ணியவான் வாத்தியாரோ  பாஸ் போட்டு அனுப்பிவிட்டார்"


" ??? "


//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

" மன்னா எதிரி நாட்டு மன்னன் நம்நாட்டுமீது படையெடுத்துவரப்போவதாக மெசேஜ் அனுப்பி உள்ளான் "

" அப்படியா.... நீ அவனுக்கு மெசேஜ் செண்டிங் பெயில்டு ரிப்ளை அனுப்பு அவன் மெசேஜ் போய் சேரலைனு குழம்பி போகட்டும் "

'இது தான் ராஜ தந்திரமோ?'
...............................................................................................................

கஸ்டமர் கேர்  அலுவலர்:-  " உங்களுக்கு என்ன உதவி சார் வேணும் "

அப்பாவி:-  "சார் நான் கிராமத்துல பிறந்து வளர்ந்தவன், சரியா இங்கிலீஸ் எழுத படிக்க வராது...நான் மெசேஜ் அனுப்பினா யாரோ செண்டிங்பெயில்ட் போட்டுடறாங்க சார். என் பிரண்டு தான் சொன்னான் இந்த மாதிரி அவங்களுக்கு போன் பண்ணி பேசுடா அவங்க எப்படியாவது பாஸ் போட்டுடுவாங்கனு அதான் போன் போட்டேன் "

" ஹலோ, போன் போடுறது இருக்கட்டும்  முதல்ல செல்லுல காசு போடுயா "

" அதைகூட மாப்ள சொன்னான் சார்... ஆனா காசை எப்படி செல்லு உள்ள போடுறதுனு தெரியல எங்கியும் காசு நுழையறா மாதிரி பெரிய ஓட்டை இல்லீங்களே "


 ???
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

மாமா: - "மச்சான் மெசேஜ் செண்டிங் பெயில்டுனு போட்டுட்டு நம்ம செக்கு டீடெய்லு எல்லாம் கேக்கிறாங்கடா.... தப்பி தவறி ஏதாவது சொல்லிடாத அப்புறம் உன் செக்கை போட்டு காசு எடுத்துடுவானுங்க ஜாக்கிறதை ?

மாப்ளே :- ???

12 கருத்துகள்:

 1. நண்பா இந்தப்பதிவு டேஷ்போர்டில செண்டிங் ஆகிடுச்சு அதனாலதான் நான் வந்தேன். பாஸ் மார்க்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ ! அந்த பாஸ் போடுற வாத்தியார் நீங்க தானோ ?

   மிக்க நன்றிகள் பல சகோ.

   நீக்கு
 2. எல்லாமே பெயில் ஆனா எப்பத்தான் பாஸ் ஆகிறது?

  பதிலளிநீக்கு
 3. பதில்கள்
  1. தங்களின் நகைப்பிற்கு மிக்க நன்றிகள் அய்யா.

   நீக்கு
 4. பெயிலுக்கு இவ்வளவு அர்த்தம் இருப்பதை ரசித்தேன் :)
  த ம 4

  பதிலளிநீக்கு
 5. யம்மாடியோவ் மெசேஜ் ஃபெயில் நு வரதுக்கு இவ்வளவு இருக்கா ஹஹஹ்ஹ்ஹஹ் மிகவும் ரசித்தோம் நண்பரே! நல்ல கற்பனை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் ரசனைக்கும் மேலான வருகைக்கும் மிக்க நன்றிகள் அய்யா.

   நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!