வியாழன், டிசம்பர் 04, 2014

பல்சுவைகாதல்

 னக்கும்
அவளுக்குமானத்தொடர்பு
என்னவென்று தெரியவில்லை.
ஏனோ

கிரகங்களை சுற்றும்
துணைக்கோளாய்
அவளைச்சுற்றி வருகிறேன் நான்.
.........................................................................................................

“சமையல் குறிப்பை விழுந்து விழுந்து படிச்சியே ஏதாவது செய்து சாப்பிட்டு பார்த்தியா..... எப்படி இருந்தது? “

“நான் ஏன் சாப்பிடறேன், ‘செய்து பார்’னு தான் அந்த புக்குல போட்டு இருந்தது... நான் செய்து பாக்கிறதோட சரி.......டெஸ்ட் பண்றதெல்லாம் எங்க வீட்டுக்காரர் மேல தான் “
..........................................................................................................................

தீபத்திருநாள்
 

அகல் போல்


அன்பை ஏற்றுங்கள் –


சிறியதாய்.


தீபம் போல்


சுற்றிலும் பரவும்


உங்கள் சுற்றம் -பெரியதாய்.

அனைவருக்கும் இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள். 

...................................................................................................

" அந்த மேக்கப்மேனை ஏன் நடிகை திட்டிவிரட்டிவிட்டுட்டாங்களாம் " 

"பாட்டி வேஷத்துல  நடிக்க  டைரக்டர் சொன்னாராம், அதுக்கு நீங்க மேக்கப்போடாமலேயே நடிச்சா போதும்னு மேக்கப்மேன் சொன்னாறாம் அதனால தானாம் "
..................................................................................................................

7 கருத்துகள்:

 1. கொழுப்புதானே ,மேக்கப் மேனுக்கு :)
  த ம 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏதோ தெரியாம உண்மை நிலவரத்தை சொல்லிட்டார் போல.....

   வருகைக்கும் வாக்களிப்பிற்கும் மிக்க நன்றிங்க அய்யா.

   நீக்கு
 2. வணக்கம் சகோ
  1.பலருக்கும் காதல் புரியாமல் தான் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்
  2. சமையல் குறிப்பைப் பார்த்துக் கொண்டே எல்லாம் வேளையும் செய்து முடித்துப் பார்த்தால் அடுப்பு பற்றவே இல்லை காரணம் அடுப்பைப் பற்ற வைக்கவும் என எந்த இடத்திலும் போடவில்லையாம்.
  3. தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் என் அன்பான தீபத்திருநாள் வாழ்த்துகள்.
  4. உண்மையை அவ்வளவு சீக்கிரம் இந்த உலகம் ஏத்துக்காதுங்கோ. சொல்றவனை விரட்டித் தான் அடிக்கும்.

  பதிலளிநீக்கு
 3. நன்றி நண்பரே
  தங்களுக்கும் தீப ஒளிதிருநாள் வாழ்த்துக்கள்
  தம3

  பதிலளிநீக்கு
 4. அந்த மேக்கப் மேன் சரியாத்தானே சொல்லியிருக்காரு.
  தங்களுக்கும் இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!