“அத்தை... அத்த”
“அடிசெருப்பால நாயே!”
துவட்டி எடுத்தார் துடப்பக்கட்டையால்.
பெத்தவளைப்போயி அத்தை அத்தைனு.....
“மச்சானை அடிக்காதீங்க அத்தை
நான் பெரியசாமி வந்திருக்கேன்”
விக்கித்துப்போனது
அம்மா மட்டுமல்ல
அந்த கிராமமும் தான்.
போன வாரம்
வெளிநாட்டில் இருந்து வந்த
வெள்ளைச்சாமிக்கு ‘பேய்’ பிடித்திருக்கு.
பிரிதொரு நாளில்
“அத்தை அத்தை “
அரண்டுப்போனார் அம்மா.
ஊரைக்கூட்டி தெருவில்
நடுவாசலில் பலபேர் கூட
ஆய் ஊய் அங்களாய்தார் மச்சான்.
“அவனுக்குஆசைப்பட்ட பொண்ணையே கட்டி வையுங்க.”
அப்படி இப்படியாக
அன்றைக்கு போய் விட்டது பெரியசாமி.
பெரியமீசை
உடுக்கை
காவி வேட்டி சகிதம்
வந்திறங்கியது
வல்லுனர் குழு.
வேண்டியமட்டும்
வாங்கி குடித்த பெரியசாமி
‘நான் போறேன்”
என
ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த பின்னர்
நடுமுடி எடுத்து நச்சுனு அறைந்தார்கள்
பெரிய புளியன் மரத்தில்.
பிரிதொரு நாளில்
அன்போடு அழைத்தார்....
மாமா
வெளிநாட்டில்
வாங்கி வந்த
பக்கார்டியர்ஸ் கிங்ஸ்
எல்லாம் இருக்கு
வாங்க கோவில் பாறைப்பக்கம்
இன்னக்கி ராத்திரி 7 மணிக்கு.
ஜெபமாலை சகிதம் 'பூஜை'யில் கலந்துக்கொண்டு
"என்ன மச்சான் உடம்பு எப்படி இருக்கு..?.."
பயந்துட்டியா மாமா
சும்மாதான்
அந்த பொண்ணை கட்டி வைக்க கேட்டேன் மறுத்தாங்க
பெரியசாமி சொன்னதுக்கு அப்புறம்
இப்ப பேசறேனு சொல்லி இருக்காங்க....
ஹா........ ஹா.... ஹா....
வாயில்
புகையுடன் மச்சான் பேசியதும்
போதையில் ஏனோ பெரியசாமிபோலவே இருந்தார்.
இன்னும் இருக்கு
அந்த புளியமரம் சாட்சியாய்.....
ஆனா
ஆசைப்பட்டது நடக்கலையே என்ன செய்வது...
அந்த
புளிய மரத்தைப்பார்க்கும்போதெல்லாம்
இப்பொழுதெல்லாம்
ஏனோ
பெரிய சிரிப்பொன்று வந்து போகிறது.
பெரியசாமி
எனக்கு பங்காளி
எங்க மச்சானுக்கு மாமன்.
#“அவனுக்கு
பதிலளிநீக்குஆசைப்பட்ட பொண்ணையே கட்டி வையுங்க.”#
பேயாய் வந்து வாழ்த்துவேன்னு சொல்லலையா :)
த ம 2
மச்சானின் அறிவே அறிவு
நீக்குஆகா
பதிலளிநீக்குஇப்படியும் ஒரு வழி இருக்கிறதா
தம +1
மச்சானின் அறிவே அறிவு
நீக்குஓஹோ...!
பதிலளிநீக்குஇப்படியெல்லாம் வேற வழி இருக்கா. நிறைய பேருக்கு இது உதவியாக இருந்திருக்குமே!!!
பதிலளிநீக்கு