செவ்வாய், டிசம்பர் 30, 2014

இறப்பும் பிறப்பும்.



ஒவ்வொரு வருடத்தின்
இறப்பும் பிறப்பும்
இப்படித்தான் முடிகின்றன-
சந்தோஷங்களோடும்
சோகங்களோடும்.



எமனின் வாகனம்
எருமை என்பர்-
ஏனோ ஆகிப்போனது
ஏரோப்ஃபிளேன்களும்
ஏந்தியவன் துப்பாக்கிகளும்
எந்திர வாகனங்களும்.  
     

கடவுள்களே !
இருந்தீர்கள் என்றால்...!!!
உங்களுக்கு
ஒரே ஒரு வேண்டுகோள் !
ஒட்டு மொத்தமாய்
மனிதங்களை கொல்லாதீர்கள்
மரத்துப்போகிறது மனங்கள்.
ஒன்றிரண்டாய் கொன்று
உங்கள் கணக்கை தீர்த்துவிடுங்கள்.


இருப்போர்
உங்களுக்கு நன்றி சொல்கின்றோம்.
இறப்போர் உமது கணக்கு.
நீங்கள் கூட்டிச்செல்வது
சொர்க்கமோ  நரகமோ
சொந்தங்களுக்கு
சொல்லிவிட்டு வரவாவது
வாய்ப்புக்கொடுங்கள்.


சிலரின் பலரின்
சிந்தனைமுடிவெடுக்கும்
தினம் இதுவாகிப்போனது.
ஆண்டுகளின்
இறப்பு நாளின் இறுதியும்
பிறப்பு நாளின் புலர்பொழுதும்.
இதைவிட்டுவிடுவேன்
அதைச்செய்வேன்.........
கடைபிடிக்க மட்டும்
ஏனோ
ஆண்டவனின்
அருள் இல்லாமலேயே போய்விடுகிறது.
இனியாவது
மனிதனை மாற்ற முடியாது(தோ) !


வரும் ஆண்டில்
வருத்தங்கள் குறைந்து
வளமிக்கவையாக.......
கடவுள்கள் மனம்திருந்தி
எல்லாருக்கும்
எல்லா கடவுள்களும்
எல்லாம் நல்அருள்புரியட்டும்.

11 கருத்துகள்:

  1. நல்ல சிந்தனை நண்பா வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் மேலான கருத்துரைக்கு மிக்க நன்றிகள் சகோ.
      இது நாள் வரை என் கணினி பழுதாகி இருந்தது... இனி தொடர்பில் இருப்போம்.

      நீக்கு
  2. #கடவுள்கள் மனம்திருந்தி#
    கடவுள்கள் தங்களின் இருப்பை நிரூபிக்கட்டும்,கொடுமைகள் ஏதும் நடக்க விடாமல் !
    த 1ம

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் மேலான கருத்துரைக்கு மிக்க நன்றிகள் சகோ.
      இது நாள் வரை என் கணினி பழுதாகி இருந்தது... இன்று தொடர்பில் இருப்போம்.

      நீக்கு
  3. பிறக்கும் புதிய ஆண்டாவது விபத்தில்லா ஆண்டாக அமையட்டும்
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவருக்கும் இனிய ஆண்டாய் அமையவே உங்களுடன் வாழ்த்துகிறேன்.

      நீக்கு
  4. சிறந்த பாவரிகள்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  5. "//எமனின் வாகனம்
    எருமை என்பர்-
    ஏனோ ஆகிப்போனது
    ஏரோப்ஃபிளேன்களும்
    ஏந்தியவன் துப்பாக்கிகளும்
    எந்திர வாகனங்களும். //"

    உண்மை தான்.

    அருமையான சிந்தனை.

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. இனிமேல் இந்த கொடுமை நடக்க வேண்டாம் என்று வேண்டுகிறேன்...

    பதிலளிநீக்கு
  7. இந்தப் புத்தாண்டாவது இனிமையாக இருக்கட்டும் நண்பரே!

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    அன்புடனும் நட்புடனும்

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
  8. வணக்கம்
    கருணை மிக்க வரிகள் பகிர்வுக்கு நன்றி
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!