சனி, ஜனவரி 03, 2015

வருஷப்பொறப்பு




 அந்த குடுகுடுப்பைக்காரனை எதுக்குடி திட்டி அனுப்புற?
 

வருஷப்பொறப்பு அதுவுமா “நல்லகாலம் பொறக்குது..... நல்லகாலம் பொறக்குதுனு.” சொன்னான்.. சரினு சந்தோஷப்பட்டு பத்து ரூவா கொடுத்தேன். ஆனா ஊருக்குப்போன எங்க மாமியார் இன்னைக்கே வந்துட்டாங்களே அதனால தான்......
................................................................................
............................................................
உங்க மாமியார் என்னடி அதிசயமா உன்னை புகழ்ந்து பேசிட்டுப்போறாங்க.......


ம் அதுக்கு ஒரு சொத்த பல் இருந்துச்சாம் வருஷ பொறப்புக்கு நான் செஞ்ச பலகாரத்தை கடிக்கும்போது அது விழுந்துடுச்சாம். பலகாரம் நல்லா இல்லனு அப்படி நக்கல்பண்ணி சொல்லிட்டு போகுது கிழம்....
.........................................................................................................................................................
வருஷப்பொறப்புக்கு ஏதாவது ஒரு நல்ல முடிவெடுத்து செய்வாங்களே நீ என்ன முடிவெடுத்த?

என் பொண்டாடி இன்னும் ஒரு நல்ல முடிவா சொல்லல.......
................................................................................................................

 ஜோசியர் :- வருஷ பொறப்பு அதுவுமா என்னங்க ரெண்டு பொம்பளைங்களோட ஜாதகம் கொண்டுவந்து பொருத்தம் பார்க்க சொல்றீங்க

 நபர்:- அது என் பொண்டாட்டி எங்க அம்மா ஜாதகம் இந்த வருஷம் இவங்க எப்படி இருப்பாங்கனு கொஞ்சம் பாத்து சொல்லுங்க அதுக்கு ஏத்தாமாதிரிதான் நான் நடந்துக்கனும்...


ஜோசியர் :- ????
..................................................................................................................................................

6 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தலைவா!, எனக்கே இன்னும் லோட் ஆகல.... அதுக்குள்ளே கமெண்ட்ஸ் ஸா ...... அசத்தறீங்கப்போங்க.... மிக்க நன்றி..

      நீக்கு
  2. வருஷம் பொறந்தாலும் மாமியார் மருமகள் சண்டைக்கு ஒரு விடிவு பொறக்காதா :)
    த ம 5

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!