வெள்ளி, நவம்பர் 07, 2014

என் முதல் கவிதை தொகுப்பு



" என்னங்க நீங்க எழுதி அனுப்பி வச்ச ஜோக் ஒன்னுமே புரியல.... எழுத்தெல்லாம் வேற மாதிரி இருக்கு ? "



நீங்க தானே போன தடவை சொன்னீங்க ஒரே மாதிரி எழுதாதீங்கனு அதான் "




" ??? "
..............................................................................................................................................



'மிஸ்' சா 'மிஸ்ஸஸ்' சா ?


“அந்த ஸ்கூல் ரொம்ப கண்டிப்பானதுதான்அதுக்குனு இப்படி பண்ணக்கூடாது”

“ ஏன் என்ன ஆச்சு? “

“அங்க டீச்சரா வேலை செய்யுற என் மனைவியை பார்க்கப்போனேன்....கவிதாவை பாக்கனும்னு சொன்னேன்.. கவிதானு சொல்லக்கூடாது மிஸ் கவிதா எங்கனு கேளுங்கனு சொல்லுராங்க”

......................................................................................................................................

“திருவள்ளுவர் இப்ப இருந்தா விஜய் ரசிகரா தான் இருப்பார்னு எப்படி சொல்றே “

“விஜய்யோட துப்பாக்கி படத்தை பற்றி அப்பவே எழுதி இருக்காரே........
துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி துப்பாற்கு
துப்பாய தூவும் மழை. அப்படினு “


“ ??? “
........................................................................................

காதல்
எழுதுங்கள்
என் கல்லறையில்
அவள்
இரக்கம் உள்ளவள் என்று.
இரக்கம் இல்லையென்றால்
என்னை
இறக்க விட்டிருப்பாளா?.
காதலில்
அனு அனுவாய்
வாழ்ந்துச்சாவதைவிட
சாவதே மேல் என்று நினைத்தாளோ ?.
......................................................................

என் முதல் கவிதை தொகுப்பு


பேசத்தெரிந்தும்
அடங்கிப்போகிறது
என்
வாய் வார்த்தைகள்.


நீ
மௌனத்தால்
பேசும்பொழுது
அதிகம் புரிந்துக்கொள்கிறது
ஆழ்மனம்.


வார்த்தைகள் இன்றி
 நான்
உன்னிடம் பேசிய
முதல்மொழி
மௌனம்
என்பதால்....
 ஏனோ
இலைகள் அரிக்கும்
புழுவாய் என்னை
தின்றுக்கொண்டிருக்கிறாய்.



மெல்ல மெல்ல
என்
கவிதைத்தொகுப்பை
ஊருக்கெல்லாம்
வெளியிட்டுக்கொண்டிருக்கிறாய்
உனதாக. 


என்
முதல் கவிதை தொகுப்பை
உனதாக்கிக்கொண்டாய்.
எவ்வித
சலனமும் இன்றி
சகலமும்
உன்னை சார்ந்ததென்று.
இன்னும்
மௌனமாய்.
 

9 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. மின்னல் வேக முத்தான முதல் கருத்துரைக்கு மிக்க நன்றிகள் அய்யா

      நீக்கு
  2. உங்களின் முதல் கவிதை தொகுப்புக்கு என் முதல் ஆதரவு ..த ம முதல் வோட்டு :)

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. தங்களின் மேலான வருகைக்கும் வாக்களிப்பிற்கும் மிக்க நன்றிகள் அய்யா.

      நீக்கு
  4. அடுத்த பதிவர்கள் சந்திப்பில் வெளியிடலாம்... சரியா...?

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!