செவ்வாய், நவம்பர் 04, 2014

முடிந்தால் நீங்களும் முயற்சி செய்யுங்களேன்.

அநேக திருமணங்கள் இப்பொழுது எல்லாம் வித்தியாசமாக நடைபெறுகின்றன. வளர்ப்பு மகன் திருமணத்தை விடுங்க. தமிழகத்தில் ஒரு கிராமத்தில் ஹெலிக்காஃப்டரில் வந்திறங்கிய மணமக்களைப்பற்றியும் சில நாட்களுக்கு முன் அறிந்திருப்பீர்கள். 

இப்ப அதுவும் இல்லை மேட்டர்.


 

 தாம்பூலம்

 மணமக்களை வாழ்த்தியவர்களுக்கு வீடு திரும்பும்பொழுது தாம்பூலக்கவர் கொடுப்பது வழக்கம். வழக்கமாக ஒரு தேங்காய், வெற்றிலைப்பாக்கு, வாழைப்பழம்...ஒருசிலரில் இனிப்பு பலகாரம் சேர்ந்திருக்கும். இது வசதிக்கு தகுந்தார்போல் அமைந்திருக்கும். அதிலேயே இப்பொழுது வித்தியாசமாக விதவிதமான பைகள் கொடுக்கிறார்கள். பைகள் மட்டுமல்லாமல் வீட்டு உபயோக சிறு பொருட்கள் வேறு தருகிறார்கள். என்ன காரணம் ? . அடுத்தவர்களை கவர வேண்டும்வித்தியாசத்தினை வியக்க வேண்டும், அல்லது எளிதில் கொடுத்தவரை மறக்க கூடாது போன்ற பல்வேறு காரணங்கள்.



 அதில் ஒன்று மரக்கன்றுகள் வழங்குவது. 


இப்பொழுது நிறைய திருமண மற்றும் விஷேசங்களில் தாம்பூலமாக மரக்கன்றுகள் வழங்குகிறார்கள். ஆச்சர்யமாக இருக்கிறது. அதே சமயம் சிறப்பான இச்செயலை நினைத்து சந்தோஷமாக இருக்கிறது. வித்தியாசம் என்று செய்கிறார்களோ என்னவோ ஆனால் தங்களையும் மீறி மற்றவர்க்கும் உதவி, உலகிற்கும் வெப்பமயமாதலை தடுக்கும்  மிக்க பயனுள்ள ஓர் நற்செயலை செய்கிறார்கள் என்பதால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

யார்சொல்லி தந்ததோ எதைப்பார்த்து கற்றார்களோ இது சிறப்பான செயல் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. முடிந்தால் நீங்களும் முயற்சி செய்யுங்களேன்.




வாழ்த்துங்கள் மணமக்களையும் இவ்விதம் மரக்கன்றுகள் வழங்குபவர்களையும்.  

6 கருத்துகள்:

  1. அருமையான தாம்பூலப் பை! பயனுள்ளதும் கூட. பல பொருட்கள் சில நாட்களில் கேட்பாரற்றுக் கிடக்கும் நாளில், இது போன்ற பயனுள்ள, நம்க்கு மட்டுமல்ல, நம்மைச் சுற்றி இருக்கும் இந்த சுற்றுப்புறத்திற்கு நன்மை விளைவிக்கும் மரக் கன்று பரிசாக வருவது மிகவும் பாராட்டப்பட வேண்டியது!

    பதிலளிநீக்கு
  2. மரக் கன்று சரிதான். நடுவதற்கு இடம் வேண்டுமே.தேவையா என்று கேட்டு விருப்பப் பட்டவர்களுக்கு மட்டும் கொடுக்கலாம்

    பதிலளிநீக்கு
  3. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  4. மரக்கன்று வழங்குவது நல்ல விடயம் ஆனால் எல்லாராலும் அதைப்பயன் படுத்த முடியாத நிலையையும் சிந்திக்க வேண்டும் ஐயா!

    பதிலளிநீக்கு
  5. கருத்துரை அளித்த அன்புள்ளங்களுக்கு மிக்க நன்றிகள்.

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!