திங்கள், நவம்பர் 03, 2014

பாலின் விலை....“என்னங்க வீட்டுக்குள்ளே நுழையும்போதும் ஹெல்மெட் போட்டுகிட்டே போறீங்க? “ 


“ காலையில எனக்கும் மனைவிக்கும் சின்ன பிரச்சனை, எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கைதான் “


“ ??? “

...........................................................................................................................................

“நம்ம தலைவருக்கு கொஞ்சம் கூட கம்பியூட்டர் அறிவே இல்லைனு மீண்டும் நிருபிச்சிட்டாரா, எப்படி ? “


“ கடைக்குப்போயி என் பையன் பெண்டிரைவர் ஒன்னு கேட்டான் இந்த வயசிலே பெண்டிரைவை வாங்கி கொடுத்தா தப்பா போயிடும் அதனால ஆண் டிரைவாவே கொடுங்கனு கேட்டாறாம் “


“ ??? “
............................................................................................................................................................

“ராமன் அப்படின்ற பெயரை ஏன் உங்க பையன் மாத்தச்சொல்லி அடம்பிடிக்கிறான் “


“ அவன் கொஞ்சம் சாப்பாடு அதிகம் சாப்பிடுவான் அதை வச்சி எல்லாரும் சாப்பாட்டு ராமன் அப்படினு கூப்பிடறாங்களாம் “

......................................................................................................................................

“ பால் விலை ஏறினதும் தமிழ்நாட்டுல ரொம்ப மோசம்பா “


“ஏன் என்ன ஆச்சு? “


“ கம்பியூட்டர்ல ‘காப்பி’ பேஸ்ட் பண்ணாக்கூட காப்பிக்கு காசு கேக்கலாம்னு ஆலோசனை சொல்றாங்களே “

...........................................................................................................................................................

“ நம்ம ராஜா பயங்கரமா யோசிக்கிறார் “


“ எப்படிச்சொல்ற “


“ பால் விலைதான் இப்ப இருக்கிறதிலேயே அதிகமா இருக்கு அதனால நம்ம நாட்டுல உள்ள மாடுகளை எல்லாம் நாமே குத்தகைக்கு எடுத்திடலாமானு ஆலோசனை கேக்கிறார் “


" ??? "  
................................................................................................................................................................ 

8 கருத்துகள்:

 1. ஹாஹஹஹாஹஹ்....ஹெல்மெட், பெண்டிரைவர்....ஹஹஹஹஹ சூப்பர்.

  பதிலளிநீக்கு
 2. # நம்ம ராஜா பயங்கரமா யோசிக்கிறார் “#
  ராஜா மட்டுமா ,நம்ம கிங் ராஜும்தான்:)
  த ம 3

  பதிலளிநீக்கு
 3. முதல் ஜோக் - உங்களோட அனுபவம் தானே!!!!

  பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!