வெள்ளி, நவம்பர் 14, 2014

எளிதில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள இங்க வாங்க...

ஈசியா இப்படி யாராவது இங்கிலீஸ் சொல்லி கொடுக்க முடியுமா?

“ பசங்களுக்கு இங்கிலீஸ் சொல்லி குடுக்கிறது நல்லது தான் அதுக்குனு இப்படியா ? ”

“ அப்படி என்ன தப்பா சொல்லி கொடுத்துட்டார்? “

“ அம்மாவுக்கு ஷார்ட்டா ‘ மம்’.  பெரியம்மாவுக்கு ‘மேக்ஸி மம்’ சின்னம்மாவுக்கு ‘மினி மம்’ அப்படினு சொல்லி குடுக்கிறாரே “

..................................................................................................................... 
மாணவனுக்கு புரிஞ்சுப்போச்சு....
 
 " டேய் எழுந்திரு ஏ பி சி டி எத்தனை எழுத்துனு சொல்லு ? " 

பையன் பேசாமல் ஆசிரியரிடம் சென்று கையை நீட்டுகிறான்

"ஏன்டா அடி வாங்குறதுக்கு கையை நீட்டுற,பதில் சொல்லு "

"சார் நீங்க என்னை எப்படியாவது அடிக்கணும்னு முடிவு பண்ணிட்டீங்க, நான் 26 எழுத்துனு சொன்னா, ஏ பி சி டி இது நாலு எழுத்துதானேனு சொல்லி அடிப்பீங்க.
நான் 4 எழுத்துனு சொன்னா நீங்க 26 எழுத்துனு சொல்லி அடிப்பீங்க. நான் ரெண்டும் சொன்னா நீங்க சின்ன ஏபிசிடி 26 எழுத்து பெரிய ஏபிசிடி 26 மொத்தம் 52 னு சொல்லி அடிப்பீங்க, எதுக்கு வம்பு மொதல்லயே அடிச்சிடுங்க சார் "
.............................................................................................................................................................
படித்ததில் பிடித்தது.

அறிஞர் அண்ணாவின் ஆங்கில புலமை

அண்ணா அவர்கள் ஒரு முறை ஆங்கில மேதைகளிடம் பேசும்பொழுது
உடனடியாக 'ஏபிசிடி' இந்த 4 எழுத்துக்கள் வராமல் 100 வார்த்தைகள் சொல்ல வேண்டும் என்றார். அனைவரும் தட்டுத்தடுமாறி தேடிக்கொண்டிருக்க அண்ணா ஒரு சிறுவனை அழைத்து one two three சொல்லச்சொல்லி 99 வரை சொல்லியவுடன் 'ஸ்டாப்' சொன்னாராம். இந்த நூறு வார்த்தைகளிலும் ஏபிசிடி எழுத்துக்கள் இல்லை. வேண்டுமானால் எழுதிப்பாருங்கள் என்றாராம் அசந்து விட்டனராம் ஆங்கிலேயர்கள்.
எண்கள் தொன்னூற்று ஒன்பது அத்துடன் ஸ்டாப். மொத்தம் 100.
 எப்புடி?

11 கருத்துகள்:

  1. இப்படி புரியுற மாதிரி ஆங்கிலத்தை எனக்கும் சொல்லிக் கொடுத்து இருந்தா ,நான் ஆங்கிலப் பேராசிரியர் ஆகியிருப்பேனே :)
    த ம 2

    பதிலளிநீக்கு
  2. அண்ணா மேட்டரா புதிதுதான் அருமை நண்பா,,,,

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. தங்களின் மேலான ரசிப்பிற்கும் வாக்களிப்பிற்கும் மிக்க நன்றிகள் அய்யா.

      நீக்கு
  4. அருமை அருமை! அதுவும் அண்ணாவைப் பற்றியய்து!

    பதிலளிநீக்கு
  5. நண்பரே எங்கள் வலைப்பக்கம் ஜஸ்ட் ஒரு விஸிட் கொடுக்க முடியுமா? உங்களுக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளோம்! முடிந்தால் நிறைவேற்றுங்கள்! வேறு ஒன்றும் இல்லை கில்லர் ஜி எங்களுக்கு அளித்த கோரிக்கையை உங்களுக்கும் வைத்துள்ளோம். மிக்க நன்றி. தொர்ந்தரவு என்றால் மன்னிக்கவும்

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!