வியாழன், நவம்பர் 13, 2014

கூட்டாஞ்சோறு.

"நம்ம திருவள்ளுவர் இப்ப இருந்தா கண்டிப்பா விஜய் ரசிகரா தான்டா இருப்பாரு"
"எப்படிடா சொல்ற? "" 'துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி துப்பார்க்கு
துப்பாய தூ உம் மழை' 
அப்படினு விஜய் படம் துப்பாக்கியை  பற்றி அப்பவே எழுதி இருக்காரு பார்த்தியா அத வச்சி தான் சொல்றேன்"

.......................................................................................................................


ஒரு ஜாலி கவிதை
..................................................
சேரனுக்கு 
  ‘கமெண்ட்' போட்டால்
 
சோழனும் 
  தோழனாவான்.

பாண்டியா 
  உன் பதில் என்ன?.  

ஆக
சொல்ல வர்ரது என்னன்னா?....
புரிஞ்சு இருக்குமே? 
ஹ ஹா ஹா.......

................................................................................................................................. 

வித்தியாசமான ஒரு கடை

 ஒரு இடத்துல பழைய பயன்படுத்திய மனித மூளைகள் விற்க்கும் கடை இருந்ததாம் அந்த கடையில்

இது ஜப்பான் நாட்டுக்காரர் மூளை 500 ரூபாய்
இது அமெரிக்க நாட்டுக்காரர் மூளை 1000 ரூபாய்
இது சீனா நாட்டுக்காரர் மூளை 1500 ரூபாய்
என விலை பட்டியல் இருந்ததாம்...இப்படியே பல்வேறு நாட்டுக்காரர்களின் மூளையின் விலையை பட்டியலில் பார்த்துக்கொண்டே வந்த சர்தார் அதிர்ந்துப்போனாராம். இந்திய நாட்டுக்காரர் மூளை விலை ஒரு லட்சம் என இருந்ததாம்.அவருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை
 கடைகாரரிடம் கேட்டார் "என்னங்க இது அநியாயமா இருக்கு. இந்திய நாட்டுக்காரர் மூளை இவ்வளவு விலை அதிகமா இருக்கே? " 

"ஒய் உமக்கு தெரியாதா, எல்லா நாட்டுக்காரனும் மூளையை அப்பப்பவே பயன்படுத்தி பயன்படுத்தி தேய்ஞ்சுப்போச்சு இந்திய நாட்டுக்காரர்கள் மூளையை பாரும் அப்படியே பயன்படுத்தாம புதுசு மாதிரியே இருக்கு அதான் விலை அதிகம் "

சர்தார்:- ???
......................................................................................................................................................... 

11 கருத்துகள்:

 1. சர்தார் ஜோக் ஸூப்பர் நண்பரே,,, நம்ம ஏரியாப்பக்கம் வாங்க,,,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றிங்க அய்யா. எங்கேயோ கேட்டது தான்.

   நீக்கு
 2. அனைத்து துணுக்குகளும் அருமை
  மிகக் குறிப்பாக சர்தார்..
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. அந்த கடைக்காரர் மூளை எனக்கு வேணும் என்ன விலை :)
  த ம 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது ஜப்பான்காரர் மூளைதான் விலை ரொம்ப கம்மி. நமக்கு வந்த விலையேற்றம் அப்பர்த்தீங்களா?

   நீக்கு
 4. அனைத்தும் அருமை.
  சர்தாரை கேலிக்கூத்தாக்கி படிச்சு தான் பழக்கம். இது கொஞ்சம் மாறியிருக்கு.

  பதிலளிநீக்கு
 5. சர்தார்ஜி ஜோக் சூப்பர் வெடி! கவிதை ஆஹா!!

  பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!