வெள்ளி, அக்டோபர் 31, 2014

கணவன் -மனைவிகணவன்:- “ ஏண்டி பையன படிடானா குரங்கு  மாதிரி சேஷ்டை செஞ்சுனு இருக்கான்... நீ எதுவும் கண்டிக்க மாட்டியா ? “ மனைவி:- “ அட,லூசு பையன் மவனே, ஏன்டா அப்பிடியே உங்க அப்பனாட்டம் இருக்க “


கணவன்:- “ ??? “
..........................................................................................................................................................


மனைவி:- “ ஏங்க, நான் எங்க அம்மா வீட்டுப்போயி  பிள்ளைங்களோட லீவு முடியற வரைக்கும் ஒரு ரெண்டு மாசம் இருந்துட்டு வர்றேங்க “


கணவன்:-  “நேத்து ஜோசியக்காரன் சொன்னது இவ்வளவு சீக்கிரம் பலிக்கும்னு நான் நினைக்கவே இல்ல “


மனைவி:- “ என்ன சொல்றீங்க ? கொஞ்சம் சத்தமா சொல்லுங்க. “


கணவன்:- சத்தமாக...... சரி சரி போயிட்டு வா.... ( மனதுக்குள் நாளையில இருந்து உனக்கு நல்லகாலம் பொறக்குதுனு எவ்வளவு சரியா சொன்னான். )
...........................................................................................................

கணவன்:-  “ எதுக்கெடுத்தாலும் ஏண்டி அவன் நாய் மாதிரி கத்தறான். பொறுமையாவே பதில் சொல்ல மாட்டானா? “


மனைவி:- “ஆமா உங்க பிள்ளை உங்கள மாதிரி தான் இருக்கும்.”
கணவன்:-  ???
..............................................................................................................................................................

2 கருத்துகள்:

  1. கணவனை குரங்கு ,லூசு ,நாய் என்று சொல்பவள் தாய் வீட்டிற்கு போனால் ,நல்லகாலம் பொறக்குதுன்னு சந்தோசப் படத்தானே செய்வார் ?
    த ம 1(நான் என் வாக்குரிமையைப் பயன் படுத்துகிறேன் :)நீங்க .....?

    பதிலளிநீக்கு
  2. சிறந்த நகைச்சுவைப் பதிவு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!