ஞாயிறு, அக்டோபர் 19, 2014

பல்சுவைகாதல்


உன்
ஒவ்வொரு
நகர்த்தலுக்கும்
நான்
நகர்கின்றேன்
சதுரங்க காய்களைப்போல.

..........................................................................................

ஒரு மேகத்தின் தாகம்

சிலைகளுக்கும்
சிற்பங்களுக்குமிடையே
சிக்கித்தவிக்கும்
சிந்தனைவாதியாக்கினாய்.
 

மரபுகளுக்கும்
மாற்றங்களுக்குமிடையே
மாட்டித்தவிக்கும்
மானிடப்பிறவியாக்கினாய்.நடுத்தரத்திற்கும்
நவீனத்திற்குமிடையே
நடுவில் நான்.மழைகளுக்கும்
மலைகளுக்குமிடையே
மாட்டிய மான் குட்டிப்போல
திகைத்துப்போகிறேன் நான்.மழைத்துளி
தாங்கும் மேகம் போல
உன் நினைவுகளை
தாங்கிநிற்கும் என் மனம்.நீர் மேகங்கள் பொழியும் மழைத்துளிபோல
என் மனம்  கவிதை பொழிகிறது
உன் நினைவுகளால்.

 .......................................................................................................................

" ராம்ராஜ்  காட்டன் நிறுவனத்தார் அந்த விளம்பர நிறுவனத்தினர் மேல நஷ்ட ஈடு கேஸ் போட்டு இருக்காங்களே ஏன்? "


"ராம்ராஜ் காட்டன் னு விளம்பரம் செய்யரதுக்கு பதிலா 'ராம்ராஜ் காட்டான்' னு விளம்பரம் பண்ணிட்டாங்களாம் அதான்"
..........................................................................................................................................


சிந்தனைக்கு:- 

ஆடம்பரமாக செலவு செய்யும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் சொத்தையே களவாடுகிறார்கள்.

7 கருத்துகள்:

  1. #'ராம்ராஜ் காட்டான்' னு விளம்பரம் பண்ணிட்டாங்களாம்'#
    ஒரு தொழில் மேதையை எந்த காட்டான் இப்படி சொன்னான் ?
    த ம 2

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!