வியாழன், அக்டோபர் 16, 2014

அம்மா சொன்னாங்க...என்ன ?
கேட்டது கிடைக்கலனா இது தான் நடக்குமோ ?

விருந்தினர்:- “ என்னங்க நீங்க கேட்ட கேள்விக்கு உங்க மனைவி ஒட்டும் ஒட்டாமலும் பதில் சொல்லிட்டு போறாங்க? ”கணவர் :- “ அதுவா நான்ஸ்டிக் தவா ரெண்டு வாங்கி கொடுங்கனு கேட்டா அப்புறம் வாங்கிக்கலாம்னு சொன்னேன் அந்த கோபம் தான்” 

.................................................................................................................................................................

இது உங்களுக்கே நியாயமா ?

“ என்னங்க அவரு வேலை செய்துக்கொண்டிருக்கும்போது திடீர்னு எழுந்து ஓடுகிறார் அப்புறம் வந்து உட்கார்ந்து வேலை செய்கிறார் ஒண்ணும் புரியலியே? “


“ ஓடி ஓடி உழைக்கிறாராம் “

“ ??? “    
....................................................................................................................................
அம்மா சொன்னா கேட்டுக்கணும்

‘இந்த பஸ் ஓடுமா ?”

 “ஓடும்’

 “அந்த பஸ் ஓடுமா”?

 “ஓடும்” 

“அதோ அந்த பஸ் ஓடுமா? ” 

“ ஓடும்யா உனக்கு என்னதான் வேணும்? “

“ ஓடுற பஸ் ல ஏற வேணாம்னு எங்க அம்மா சொன்னாங்க சார் அதான் “

“ ??? “
.......................................................................................................................................................

6 கருத்துகள்:

  1. இலக்கியச் சுவை சொட்டும்
    இனிய பதிவு இது!
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!