திங்கள், அக்டோபர் 20, 2014

தள்ளுபடி ஹ ஹா ஹா....“ ஸ்கேன் பண்ண ஏதாவது தீபாவளி தள்ளுபடி போட்டு இருக்கிறாங்களா அப்பா “

“ ஏன்டா நல்லா தானே இருக்க ஸ்கேன் எதுக்கு ? “


“ இல்ல வாத்தியார் அடிக்கடி உன் தலையில களிமண் தான் இருக்குனு சொல்றாரு அதான் தள்ளுபடி ஏதாவது இருந்தா பண்ணி பார்த்திடலாம்னு ஒரு ஐடியா “

“ ??? “
..............................................................................................................................

“ தள்ளுவண்டிக்காரர்கிட்ட தீபாவளி செலவுக்கு தள்ளுசீட்டு கட்டினியே என்ன ஆச்சு ? “


“எங்க கொடுத்தாங்க. மொத்த காசையும் தள்ளிகிட்டுப்போயிட்டாங்க “

.............................................................................................................................................

“ அந்த சுவீட் கடையில மட்டும் என்ன அப்படி கூட்டம் ? “


“அவங்க கடை பலகாரங்களை யாரும் சாதாரண பல்லால் கடிச்சு சாப்பிட முடியாதாம்.... அதானல இரும்பு  பல் செட் ஒன்னு ஃப்ரியா தர்றாங்களாம் அதான் “

“ ???”
......................................................................................................................................

“ சேல்ஸ்மேனுக்கும் கஸ்டமருக்கும் என்னங்க சண்டை ? “ 


“கஸ்டமர் தீபாவளி தள்ளுபடி ஏதாவது உண்டானு கேட்டு இருக்கார் ...அதெல்லாம் ஒன்னும் இல்ல வேணும்னா படியில தள்ளிவிடறேன்னு சேல்ஸ்மேன் சொன்னாராம் அதான் சண்டை.”
“ ??? ”
.................................................................................................................................
  

2 கருத்துகள்:

  1. # தள்ளுபடி ஏதாவது இருந்தா பண்ணி பார்த்திடலாம்#
    இப்படி நினைக்கிறவன் தலையிலே களிமண்ணுதான் இருக்கும் !

    பதிலளிநீக்கு
  2. குடும்பத்தினர் , உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!