புதன், அக்டோபர் 15, 2014

ஜஸ்ட் ஸ்பெல்லிங் மிஸ்டேக்.“ என்னங்க அய்யா இது நம்ம தீபாவளி சிறப்பு பட்டிமன்ற கூட்டத்திற்கு வெறும் பாட்டிகளா வந்திருக்காங்க ? “ 

“ வெளிய போயி போர்டை பாருய்யா...

தீபாவளி சிறப்பு பட்டி மன்றக்கூட்டம் அப்படினு பேனர் அடிக்கிறதுல பாட்டி மன்றக்கூட்டம் னு பிரிண்ட் மிஸ்டேக் பண்ணி தொலைச்சிருக்காங்க அதனால தான்....”
.....................................................................................................................................................................

“ஏங்க நம்ம வழக்கறிஞர் கூட்டத்துக்கு வராம கோவிச்சிக்கிட்டுப்போறார்? 

" பின்ன பேனரைப்பாரு. இந்தியாவில் தலைசிறந்த ‘லாயர்’ களில் ஒருவர் னு அவர் பேரை போடுவதற்கு பதிலா இந்தியாவில் தலைசிறந்த ‘லையர்’ களில் ஒருவர் னு போட்டு இருக்கீங்க “
........................................................................................................................................................

“ என்னப்பா நம்ம ஹாஸ்பிட்டல் முன்னாடி எல்லாரும் நாய்களுடன்  வந்திருக்காங்க? “

“ போர்ட பாருங்க டாக்டர், நேற்று புதுசா மாட்டின போர்டுல  அனைத்து நோய்களுக்கும் வைத்தியம் பார்க்கப்படும்னு போடுறதுக்கு பதிலா அனைத்துவகை நாய்களுக்கும் வைத்தியம் பார்க்கப்படும் னு எழுதி இருக்கு “
.............................................................................................................................................................

"பத்திரிக்கையில் பெயர் போட்டும் ஏன் பெண்ணோட தாய்மாமன் கல்யாணத்திற்கு வரவில்லை?"


" தாய் மாமன் னு போடுறதுக்கு பதிலா நாய் மாமன் னு போட்டிருக்காம் "


" ??? "
......................................................................................................................................................

" ஆசிரியர் அந்த மாணவனை ஏன் கண்டிக்கிறார் ? "" ஆசிரியருக்கு கம்பு பிடிக்கும் னு வாக்கியத்தை போர்ட்ல  எழுதச்சொன்னாராம்  மாணவன் ஆசிரியருக்கு கொம்பு பிடிக்கும் னு எழுதி இருக்கான்  அதான் "
.......................................................................................................................................................

10 கருத்துகள்:

 1. ஜஸ்ட் ஸ்பெல்லிங் மிஸ்டேக்.என்று எடுத்துகிட்டு நாய் மாமன் வந்து வள்ளுவள்ளுன்னு விழுந்து இருக்க வேண்டாமா )
  த ம 2

  பதிலளிநீக்கு
 2. பதில்கள்
  1. தங்களின் வருகைக்கு மிக்க நன்றிகள் பல தோழா.

   நீக்கு
 3. ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆவதுனால என்ன எல்லாம் பிரச்சனையாகுது.
  அனைத்தும் அருமை.

  பதிலளிநீக்கு
 4. ஹாஹஹாஹ்ஹ்....ஹப்பா ஒரே ஒரு எழுத்துப் பிழை....அர்த்தமே மாறிப் போயிடுது.....சூப்பர்! அனைத்துமே!

  பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!