செவ்வாய், அக்டோபர் 14, 2014

அம்மாவுக்கு கிரகங்கள் சரியில்லை, அதனால்... “ ஹலோ... அம்மாவுக்கு உடம்பு சரியில்லை.....”

“ அய்யய்யோ என்ன ஆச்சு, சிறையில நல்லாதானே இருக்கிறதா சொல்றாங்க “


“ அடங்க, நான் சொல்றது உன்னபெத்த அம்மாவை..உடனே ஊருக்கு கிளம்பி வா “

மைன்ட்வாய்ஸ்- அம்மா னா இப்ப யாருக்காவது பெத்த அம்மாவை உடனே நினைக்க தோணுதா பாருங்க.
.................................................................................................................................................
“இன்று தினமலர் பேப்பரை பார்த்து அதிமுக வினர் அதிர்ச்சி ஆயிட்டாங்கப்பா “ 

“ ஏன் என்ன ஆச்சு ? ”

“ அம்மாவுக்கு கிரகங்கள் சரியில்லை அதனால தொண்டர்கள் யாரும் நான்வெஜ் சாப்பிடாதீங்கனு ஜோசியர்கள் சொல்லி இருக்காங்களே “

மைன்ட் வாய்ஸ் :- அடங்கொய்யால.....  தீபாவளி அதுவுமா இப்படி வெறும் வெஜ்ஜை வாரி வாயில போடுறீங்களே !.
............................................................................................................................

மந்திரி:- "ஒரு நாளு நாளைக்கு என்னை நம்மகட்சியில இருந்து டிஸ்மிஸ் பண்ணுங்க..அப்புறம் மறுபடியும் சேர்த்துக்கணும் "

தலைவர்:- "ஏன்?"

மந்திரி:- " நாளைக்கு நான் ஆடுவெட்டி சாமி கும்பிடறதா வேண்டிகிட்டு இருக்கேன். இப்ப போயி இதுமாதிரி சொல்லிட்டாங்களே அதனால தான் "

.........................................................................................................................................
" கறி கடைக்காரர்:- என்னங்க கடைக்கு தலையில  துண்டை போட்டு முகத்தை மூடிகிட்டு வர்ரீங்க ? "

" மெதுவா பேசுங்க பாய்... யாராவது கடை பக்கம் என்னை பார்த்துட்டா அப்புறம் கட்சியில இருந்தே தூக்கிடுவாங்க ".
.................................................................................................................................................

அப்பாவித்தொண்டர்:- "தலைவரே நாளைக்கு என்புள்ளைக்கு கெடாவெட்டி காது குத்தறேன் அவசியம் கலந்துக்கணும் "

தலைவர்:-  " ஏன்யா இந்த நேரத்துல இப்படி செஞ்சி ஒழியற.... என் பதவிக்கே வேட்டு வக்க பாக்கறியே "

அப்பாவித்தொண்டர்:- ???
............................................................................................................................................................


4 கருத்துகள்:

  1. ஹ்ஹாஹஹஹ....எல்லாமே அருமையாக உள்ளது நண்பரே! ரசித்தோம்!

    பதிலளிநீக்கு
  2. #கட்சியில இருந்தே தூக்கிடுவாங்க #
    அவரை தூக்கிறது இருக்கட்டும் உங்களை தூக்கிடாம பார்த்துக்குங்க )
    த ம 2

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!