ஞாயிறு, அக்டோபர் 12, 2014

வருமானத்துக்கு அதிகமான சொத்து உண்மை தான் ஆனால்......“ உங்க மந்திரி மாப்பிள்ளைக்கு தலை தீபாவளி வருது, அவருக்கு  சீர்வரிசையா என்ன செய்யப்போறீங்க? “

 
“ முன் ஜாமீன் ஒரு அஞ்சு, வாங்கி கொடுக்கலாம்னு நினைச்சுகிட்டு இருக்கேன்  

“???”
...........................................................................................................................................
“ அதென்னங்க அதிமுக வெடி ? “

“என்னைக்கு நீங்க பத்த வச்சாலும் அம்மாவுக்கு என்னைக்கு ஜாமீன் கிடைக்குதோ அன்னைக்கு தான் வெடிக்கும்.”

“???”
.......................................................................................................................
“ தினமும் கோர்ட் படியேற வச்சிட்டார்ரா எங்க அப்பா “

“ ஏன்டா உன் மேல ஏதாவது கேஸ் போட்டுட்டாறா? “

“ அதெல்லாம் ஒண்ணும் இல்ல, என்னை வக்கீலுக்கு படிக்க வச்சதை சொல்றேன் “

“???”
......................................................................................................................................................
“ நம்ம மந்திரிக்கு புத்திகித்தி கெட்டுப்போச்சானு தெரியல? “ 

“ ஏன் என்ன ஆச்சி ? ”

“ நாங்க வருமானத்துக்கு அதிகமா சொத்து குவிச்சு வச்சி இருக்கிறது உண்மை தான், அதை நாங்க ஒண்ணும் ஊதாரி தனமா செலவு பண்ணிடலயே? சேர்த்து தானே வச்சிருக்கோம். சேர்த்து வக்கிறது ஒரு குற்றமா?  அப்படினு மேடையில பேசுறார் “

“ ??? “
.................................................................................................
“ புது மந்திரி ரொம்ப அப்பாவியா இருக்காரு “

“ ஏன் ? “ 

“ கொடநாடு எந்த நாட்டுக்கு பக்கத்துல இருக்குனு கேக்குறார் “ 

“ ??? “
....................................................................................................................
“ அந்த வக்கீல் வீட்டுக்கு முன்னாடி என்ன கட்சி தலைவர்கள் முட்டிமோதிகிட்டு போறாங்க ? “

“ ஒரு ஜாமீன் வாங்க பணம் கட்டினால் போதுமாம் இன்னொரு ஜாமீன் இலவசம் னு அறிக்கை விட்டாராம்,.....  அதான் இந்த கூட்டம்.“

 “ ??? “
..................................................................................................................................................

4 கருத்துகள்:

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!