ஞாயிறு, செப்டம்பர் 07, 2014

இப்போது விற்பனையில் ...முந்துங்கள்...   களவாணி நகர்
நீங்கள் விரும்பும் வசதிகள் மற்றும் விரும்பாத எல்லா வசதிகளும் 

நிறைந்த தொடும் தூரத்தில்.உள்ளது ( மேப் மற்றும் விளம்பரத் தாளில்

 தொடும் தூரம்)..மனையின் சிறப்பம்சங்கள்...
1). இந்திய தேசிய நெடுஞ்சாலையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அருகிலேயே மனைப்பிரிவு (layout) அமைந்துள்ளது (சுமார் 52 கிமீ தூரத்தில்).


2). பெண்கள் கல்லூரியும் அருகிலேயே ஆண்கள் கல்லூரியும் உள்ளது.

 இரண்டும் நமது மனையின் கொஞ்ச தூரத்தில் பேருந்தில் சென்றால் 4

மணி நேரத்தில் அடைந்துவிடலாம்.3).மனைப்பிரிவின் உள்பகுதியிலேயே நமது நகரத்தின் மிகப்பெரிய

 இரண்டாவது சாக்கடை ஓடுவதால் உங்கள் வீட்டு கழிவு நீரை எளிதாக 

வெளியேற்றலாம். நாற்றம் அடித்தால் இலவச பிளீச்சிங் பவுடர் ஒரு

 மாதத்திற்கு இலவமாக வழங்குகிறோம்.4) மனையின் அருகிலேயே முதியோர் இல்லங்கள் கட்டப்படுவதால் பெற்றோரை எந்த நேரத்திலும் அங்கே சேர்த்துவிடலாம். முதல் 10 நபர்களுக்கு இலவச அட்மிஷன் உண்டு.5) சுமார் (50)ம்பதே கிலோமீட்டர் தூரத்தில் இரயில் நிலையமும், (40) ப்பதே கிமீ தூரத்தில் பேருந்து நிலையமும் இருப்பதால் பயணங்கள் செய்யமுடியாத நிலையால் பணம் சிக்கனம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.6) நகருக்கு வெகு அருகாமையில் நடக்கும் தூரத்தில் சப்ஜெயில் உள்ளது
.


7) வெளி நாடு, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் மற்றும் பிளாக் நடத்தும் அனைவருக்கும் மனையை பார்க்க வரும்பொழுது இலவசமாக குருவி ரொட்டியும் நாயர்கடை டீயும்  வழங்கப்படும்.
 உடனே வீடு கட்டி குடியேற முடியாத இடம். ஏன் என்றால் 

இன்னும் ஐம்பது வருடங்களிலேயே பன்மடங்கு 

விலையேறும் சொத்து இது.

உங்கள்  முன் பதிவிற்கு முந்தவும்.


 முதலில் வரும் 50 நபர்களை இரண்டு நாள் சுற்றுப்பயணமாக

 நமது மனைப்பிரிவிற்கு அழைத்து செல்லப்படும் (அதுவும்

  உங்கள் செலவிலேயே.)

(முக்கிய குறிப்பு:- அடைப்புக்குறியில் உள்ளதை மிக கவனமாக படிக்கவும்.)பிளாக் நடத்தி சரியான வருமானம் இல்லாத காரணத்தால் ரீல் எஸ்டேட் பிசினசில் இறங்கி விட்டோம்.                                                                                  
என்றும் உங்கள் ஆதரவை நாடும்...

என்றும் இனியவன்,
எல்லோருக்கும் எப்பொழுதும்,

இப்படிக்கி இஆரா.
 

3 கருத்துகள்:

  1. இந்நேரம் பிளாட் எல்லாம் விற்றிருக்குமே ,எதுக்கும் இருக்கான்னு கேட்டுச் சொல்லுங்க !
    த ம 3

    பதிலளிநீக்கு
  2. ஹாஹாஹா.....செம காமெடிங்க....அப்படியே நமக்கும் ஒண்ணு இருக்கான்னு பாருங்க......ஐயோ வேண்டாங்க....அந்த ப்ராகட்ல கொடுத்துருக்கறது கண்ணக் கட்டுதுங்க,,,,,

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!