சனி, செப்டம்பர் 06, 2014

‘All in All ’ அழகு ராஜாக்கள் (அல்லது) சகலகலா வல்லவர்கள் (அல்லது) ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.ஆசிரியர் தினம் இந்தியாவில் பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்கள் தயாவால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது என்பதைஅனைவரும் கண்டு களித்திருப்பீர்கள்.
 
நிற்க தமிழகத்தில்...?

 

அதைவிடுங்க. எப்படி ஆயினும் உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள தமிழகத்தில் உள்ள ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களின் இன்னல்கள் சந்தோஷங்களை உங்களுடன் பகிரலாமா என்ற சந்தேகத்துடனே இந்த பதிவு.


மிக நீண்ட தலைப்பு..

 ஆமாங்க ‘பிளாக்’ல மிக நீண்ட தலைப்பு வைத்ததற்காக கின்னஸ் ரெக்கார்ட் ஏதாவது இருந்தா பரிந்துரைப்பண்ணுங்கள். உங்களுக்கு ஒரு புண்ணியமாகப்போகும்.
ராஜாதி ராஜ ராஜ கம்பீர ராஜ குலோத்துங்க ராஜகுல திலக............இப்படி சினிமாவுக்கு நீண்ட..பெயர்வைத்த மன்சூர்அலிகானின் ரெக்கார்டைப்போல.

இந்த தலைப்பு நிச்சயமாக தமிழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் பொருந்தும். 

உண்மையில் அவர்கள் ஆல் இன் ஆல் அழகு ராஜாக்கள் எனலாம். அவர்களை சகலகலா வல்லவர்கள் என்பது நிச்சயம் உண்மை.

உங்களின் ஆரம்பக்கால பள்ளி ஆசிரியரைக்கொஞ்சம் நினைத்துப்பாருங்கள் தானாக எல்லாம் புரிந்துவிடும்.

இன்றைய தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளிகள் அநேகப்பள்ளிகள் இரண்டு ஆசிரியர் பள்ளிகளே..காரணம் மாணவர்கள் குறைவு. ஏன்?
ஒரு ஊருக்கு எல்லா ஆங்கிலப்பள்ளிகளில் இருந்தும் பஸ் அனுப்புகிறார்கள். ஏறக்குறைய 40 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து பேருந்துகள் வந்து அழைத்துச்செல்கின்றன.
மாணவர்கள் அரசு பள்ளிகளில் குறைவிற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.இது ஒரு முக்கிய காரணம். அடுத்து பொருளாதார வளர்ச்சி...அடுத்து நாம இருக்கிற நிலைமையை விட தன் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணங்கள்.

சரி ஏன் ஆல் இன் ஆல் அழகு ராஜாக்கள்.?.

 அனைத்து பாடங்களையும் ஒரே ஆசிரியர் தான் நடத்தி ஆக வேண்டும்.
1ம் வகுப்பில் 4 பாடபுத்தகங்கள் 2ம் வகுப்பில் 4 பாடபுத்தகங்கள்,3ம் வகுப்பில் 5 பாட புத்தகங்கள் 4ம் வகுப்பில் 5 பாடபுத்தகங்கள் 5ம்வகுப்பில் 5பாடபுத்தகங்கள் ஆக மொத்தம் 23 பாடப்பகுதிகள்....

ஒருநாளில் நடக்க வேண்டியது   23 பாடப்பகுதிகள் இதைநினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

ஏன் ஒரு ஆசிரியர்  தான் நடத்தியாகவேண்டும் என்ற வினாவிற்கு வந்தால் ஆச்சர்யங்கள் காத்திருக்கும்.

இரண்டு ஆசிரியர் பள்ளியில் ஏதாவது காரணத்தினால் எப்படியும் ஒரு ஆசிரியர் மாற்றி ஒரு ஆசிரியர் விடுப்பில் இருப்பார்கள்..ஒன்று தற்செயல் விடுப்பு அல்லது மதச்சார்பு விடுப்பு அல்லது மருத்துவ விடுப்பு அல்லது பணியிடைப்பயிற்சி அல்லது தலைமையாசியர் கூட்டம் அல்லது சங்க வேலைகள் அல்லது அலுவலக வேலை அல்லது மக்கள் தொகைகணக்கெடுப்பு அல்லது வாக்காளர் பட்டியல் சேர்ப்பு வேலை அல்லது தேர்தல் பணி அதற்கான பயிற்சி நாட்கள்....... இப்படி அல்லது அல்லது என்று அடுக்கிக்கொண்டே போகலாம். ஆக ஒரு ஆசிரியர் அனைத்து வேலைகளையும் செய்தாக வேண்டிய அவசியம்...இதுமட்டும் இல்லாமல் ஆயிரத்து எட்டு ரெக்கார்டுகள் மெயிண்டெண்ட் பண்ண வேண்டும் இதைசொன்னால் தலைசுத்தும்...இது கொஞ்சம் தான்...........  உதாரணங்கள் தான்........சொல்லவேண்டியது நிறைய இருக்கு.

இதற்கிடையில் ஒரு உரையாடல்.....


‘சார் என் பையனை சேர்த்துக்கோங்க”

“பர்த் சர்டிபிகேட் இருக்கா?’

 “இந்தாங்க”

“அடடா, நாலரை வயது தான் ஆச்சு அடுத்த வருஷம் தான் சேர்க்க முடியும்”
“சார் வீட்டில் இவனை வச்சி மேய்க்க முடியலை எப்படியாவது சேர்த்துக்கோங்க”

அட ஒரு பையனையே வீட்டில் வைத்து பார்த்துக்கொள்ள முடியவில்லையே
இருபது ஐம்பது பிள்ளைகளை ஆசிரியர்கள் மேய்த்தாக வேண்டிய நிலைமை.

அட எதுவா இருந்தாலும் பத்து நிமிடங்களுக்கு பிள்ளைகள் மேல் தாக்கு பிடிக்க மாட்டார்கள். அகிம்சை வழியாகட்டும் அடி உதை ஆகட்டும் இவர்களிடம் பலிக்காது... அடுத்த நிமிடம் இவர்கள் எல்லாம் மறந்து....... பேசவோ....... விளையாடவோ ஆரம்பித்து விடுவார்கள்..பாடம் நடத்தவும் முடியாது..... படம் பார்க்கவும் முடியாது.
டாம் அண்ட் ஜெர்ரி, டோரா புஜ்ஜி எல்லாமே விதிகளினை மீறி ஸ்மார்ட் போர்டில் போட்டு பார்த்துவிட்டேன்....பார்த்தாலும் யாராவது அடித்துக்கொண்டு அழுது கொண்டு தான் இருப்பார்கள்
.
இவர்களை கட்டி மேய்ப்பது என்பது கை வந்த கலையாக இருக்க வேண்டும். இல்லையேல் பெற்றோர்கள் சண்டைக்கு வந்து விடுவார்கள்... என் பையனை எப்படி அடிச்சி இருக்கான் பாருங்க என்று.... அவங்க ரெண்டு பேரையும் ஒன்னா கூட விடாம பார்த்துக்கோங்க அப்படினு சொல்லிவிட்டு போவார்கள்.
பெற்றோர்கள் சண்டை முடிந்து சமாதானம் அடைந்தார்களோ இல்லையோ அடித்த பையனும் அடிவாங்கியவனும் அடுத்த கட்ட சண்டைக்கோ விளையாட்டிற்கோ ஆயத்தமாகிக்கொண்டிருப்பார்கள்..அவர்கள் சுபாவம் அப்படி..ஆனால் அப்பா அம்மா என்ன சொன்னாலும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.... இப்படி சமாளிக்க வேண்டிய இக்கட்டான பிரச்சனைகள் பல...
இப்படி சொல்லிக்கொண்டே போனால் ..... பக்கங்கள் பற்றாக்குறை ஏற்படும்..நிற்க...

ஒரு ஜாலியான செய்தி...
ஒரு நாள் விளையாட்டின் போது அந்த கால பழைய விளையாட்டான  ‘சங்கிலி புங்கிலி கதவை திற’ விளையாட்டு விளையாடிக்கொண்டிருந்தார்கள்.
புலி ஆட்டை துரத்தி பிடிக்க வேண்டும் ...என்ன ஆச்சு....
ஆடாக விளையாடிய மாணவன் புலி யாக இருந்தவனை துரத்த ஆரம்பிக்க புலியாக இருந்தவன் பயந்துக்கொண்டு ஓட..... அனைவரும் வாய் விட்டு சிரித்தார்கள்... 

என்னதான் அடித்தாலும்உதைத்தாலும் திட்டினாலும் மனதில் வைத்துக்கொள்ள தெரியாத பச்சிளம் பிள்ளைகளுடன் வாழ்க்கை நடத்துவது என்பதும் தனி சுகம் தான்.

இப்படி எல்லாம் (...!....?)  வல்ல மாணவர்களை வருங்கால இந்திய தூண்களாக மாற்றும் பொறுப்பில் உள்ள ஆல் இல் அழகு ராஜாக்களாகிய சகலகலைகளையும் கொண்ட ஆசியர்களை  பாரட்டுவது நிச்சயம் பொருந்தும்.
நமக்கு கற்றுக்கொடுத்த அனைத்துவகை ஆசிரியர் சமூகத்திற்கும் இந்நாள் ஆசிரிய பெருமக்களுக்கும் ஆசியர் தின நல் வாழ்த்துக்கள்.

8 கருத்துகள்:

 1. அந்த காலத்தில் மக்கள் தொகை குறைப்பிற்கும் ஆள் பிடித்தார்களாம் ஆசிரியர்கள் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வீடு வீடாகச்சென்று மாணவர்களையும் பிடித்து? வருவார்கள்.

   நீக்கு
 2. ஆமாம் ஐயா... குழந்தைகளை வைத்து சமாளிப்பது ஓர் தனி கலை...

  இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் ஐயா..

  பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!