செவ்வாய், செப்டம்பர் 16, 2014

போண்டா டீ



“பொண்டாட்டியை ஏங்க அப்படி திட்டுறீங்க?”
“அவ கொடுத்த ‘போண்டா டீ’ நல்லாவே இல்ல அதான் “

...............................................................................................................................................................
இன்றைய தத்துவம்:- வாழ்க்கையில் அடிக்கடி சோதனை வரலாம்...ஆனால் வாழ்க்கையே சோதனை என்றால் சிந்திக்க வேண்டிய விஷயம்? எதனால்...... 

...................................................................................................................................................................

முக நூலுக்கு நன்றி.
உள்விடுதியில்
உன்னோடு வாசம் பண்ணிய நாட்கள்.........
முகநூலில்
உன் படம் பார்த்து அடையாளம் கண்டு கேட்டபொழுது...?
போகட்டும்......
நான் மீண்டும் விளக்குகிறேன்

டியூஷனுக்குப்போகிறோம் என்று கூறி
திருட்டு தனமாய்
வேறு வகுப்பறையில்
தூங்கி வந்த கதை சொல்லவா?

 பாடம் புத்தகம் நடுவே
‘கல்கண்டு’ வாசித்ததை சொல்லவா?

விளையாட்டு நேரத்தில்
நாம் வீணாய் கதை பேசியதை சொல்லவா?

பெற்றோர் கொண்டு வந்த திண்பண்டங்களை
பங்கிட்டு பகிர்ந்துக்கொண்டதை சொல்லவா?

பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை
வீட்டிற்கு போக வேண்டும் என அனுமதி வாங்கி
‘வருஷம் பதினாறு’ படம் பார்த்ததை சொல்லவா ?
எனக்கு
ஏறக்குறைய எல்லாம் ஞாபகம் இருக்கிறது....
நாம் நண்பர்களாய் இருந்ததற்கான அடையாளங்கள்...

உனக்கோ மறந்துவிட்டது
காலம் பிரித்து வைத்து கோலமிட்டாலும்

முக நூலில்
என் நீண்ட நேர விளக்கத்திற்கு பின்
நீ எளிதாக சொல்லிவிட்டாய்
எனக்கு அவ்வளவாக ஞாபகம் இல்லையென.

நன்றி
நண்பனை மீண்டும் அடையாளம் காட்டி
‘சார்’
என்றாவது
 நாம் 
அழைத்துக்கொண்டிருப்பதற்காக.
முகநூலுக்கு.
........................................................................






 

4 கருத்துகள்:

  1. சிரிப்பும், தத்துவமும் அருமை நண்பா.

    பதிலளிநீக்கு
  2. கூட இருந்து பதினாறு வயதினிலே படம் பார்த்த நண்பரா மறந்து விட்டார் ?இன்னும் மயில் நினைப்பிலேயே இருப்பார் போலிருக்கு !
    த ம 2

    பதிலளிநீக்கு
  3. சிறந்த கருத்துப் பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!