வியாழன், செப்டம்பர் 18, 2014

3 சக்கர வண்டி....“ வீட்டுக்கு பக்கத்தில் இருக்கிற பள்ளிக்கூடத்தை ஏன் தூரமா மாத்தச்சொல்லி தலைவர் அடம்பிடிக்கிறார் “

“ பள்ளிக்கூட மணி சப்தம் கேட்கிறபொழுதெல்லாம் ஜெயில் ஞாபகம் வந்திடுதாம் அதான் ”


???
........................................................................................
“ கபாலி வீட்டின் முன்னாடி ஏன் போலீஸ்காரர்கள் சிலபேர் என்னமோ கோஷம் போடுறாங்க “

“ விலைவாசி ஏறிப்போச்சாம் தீபாவளிக்கான போனஸ் மாமூல் பணத்தை கொஞ்சம் அதிகம் தரச்சொல்லி கோஷம் போடுடாறங்க “

???
............................................................................................
“ அந்த ஆட்டோக்காரர்கள் ஏன் நம்ம கட்சியை பற்றி திட்டிகினே போறாங்க “

“ மூனு சக்கர இலவச வண்டி தருகிறோம்னு தலைவர் சொன்னார் இல்லையா..எல்லோரும் ஆட்டோ தான் இலவசமா தருவாங்கனு நினைச்சுகிட்டு வந்தார்களாம்....நிதி பற்றா குறையால குழந்தைகள் நடைபழகும் மூனு சக்கர நடை வண்டியை தந்திட்டாராம் அதான் “

???
........................................................................................................................
மேனேஜர்:- “என்னங்க நான் சொன்ன மெயில் உங்க இன்பாக்ஸ் ல இருந்துச்சா படிச்சிட்டீங்களா?”

சர்தார்ஜி:- “என்னோட டேபில் பாக்ஸ் மட்டும் இல்ல சார் நம்ம ஆபீஸ்ல இருக்கிற எல்லா டேபில் பாக்ஸையும் திறந்து பார்த்துட்டேன் சார் ஒன்னும் கிடைக்கல.... எந்த டேபில் பாக்ஸ் னு கொஞ்சம் ஞாபகம்படுத்தி சொல்லுங்க சார் “ 

மேனேஜர்:- ???
.................................................................................
1:- “ என்னங்க இன்னும் ஒரு பொய் தான் பாக்கி இருக்கு மீதி 999 சொல்லியாச்சு அப்படினு சொல்றீங்க எனக்கு ஒன்னும் புரியல “

2:- “அட ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை பன்னுனு பெரியவங்க சொல்லிட்டாங்க, 999 பொய்சொல்லிட்டேன் இன்னும் ஒன்னு சொன்னா என் கல்யாணம் நல்லபடியா முடிஞ்சுடும்”

1:- ???
................................................................................................
1:- “ காதலிக்கும் மனைவிக்கும் என்னங்க வித்தியாசம்?”

கவிஞர்:- “ காதலி கரும்பைப்போன்றவள்
         மனைவி இரும்பைப்போன்றவள்” 

1:- ???
.......................................................................................................................

7 கருத்துகள்:

 1. அனைத்துமே டமார், டுமீல்தான் நண்பரே...
  கபாலி வீட்டுக்கு முன்னால் கோஷம் போட்டால் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கச்சொல்லுங்கள் நண்பரே...

  பதிலளிநீக்கு
 2. எல்லாம் அருமை
  குறிப்பாக முதல் மிக மிக அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. ரசிக்க வைத்த மூன்று சக்கர வண்டிக்கே என் மூன்றாம் வாக்கு !
  த ம 3

  பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!