வெள்ளி, செப்டம்பர் 12, 2014

தீபாவளி நெருங்க நெருங்க....பேஷண்ட்:- “என்னங்க ஆப்ரேஷன் பண்றதுக்கு முன்னாடி டாக்டர் பிரேயர் பண்றார், அவ்வளவு பக்தியா?”

நர்ஸ்:- “கொலை குற்றம் செய்யப்போவதற்காக கடவுளிடன் முன்கூட்டியே பாவமன்னிப்பு கேட்டுட்டு அப்புறம் தான் ஆப்ரேஷனை ஆரம்பிப்பார் “

பேஷண்ட்:- ???

...................................................................................000................................
“ குதிரை வாலை பிடிப்பு இழுத்ததற்கா  அந்த பொண்ணு உங்களை பளார் பளார் னு அறைஞ்சது...உண்மையை சொல்லுங்க “

“ ‘குதிரைவால் சடை’ போட்டு இருந்தது அந்த பொண்ணு ஆச்சே “
..................................................................................000..................................................

 “ தீபாவளி நெருங்க நெருங்க இப்பவே வயித்த கலக்குது “

“ ஏன் செலவு அதிகமா ஆகும்னா “

“ இல்லீங்க என் மனைவி செய்யற பலகாரங்களை முதல்ல எனக்குத்தான் கொடுத்து ருசி பார்க்க சொல்லுவா “
 .............................................0000000000000000000000000...................................

“வர வர தலைவருக்கு விவஸ்தையே இல்லாம நடந்துக்கிறார் “
“ஏன் என்ன ஆச்சு ? “

குழந்தைக்கு நெஞ்சை தொடர மாதிரி நல்ல பெயரா ஒன்னு வக்கச்சொன்னாங்க.... ‘பனியன்’ அப்படினு பெயர் வைக்கிறார். இதான் நெஞ்சை தொட்டுகிட்டே இருக்குமாம் “

....................................................................000000..........................................................
“மெடிக்கல் வச்சி இருக்கிறவரை கட்டிகிட்டது தப்பா போச்சா ஏன்டி? ”

“அட ‘மருந்துக்கு’க்கூட சிரிக்கமாட்டுகிறாரே.”
............................................................................000000000000000000000......................

4 கருத்துகள்:

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!