புதன், செப்டம்பர் 10, 2014

'கத்தி' பன்ச் டயலாக்.




ஒரு கவிதை
வெட்ட வெட்ட
வளரும்
நகத்தைப்போல.
மற்றவர்
திட்ட திட்ட
வளர்கிறது
என் காதல்.

........................................
ஒரு ஜோக்ஸ்
செயலர்:- "கொடுமைப்படுத்தும் மனைவியர் எதிர்ப்பு சங்கத்தலைவராகிய நீங்களே நேற்று ஏன் ஆர்பாட்டத்துக்கு வரல.?"

தலைவர்:- “அதுவா என் மனைவி போகக்கூடாதுனு சொல்லிட்டாங்க அதான் வரலை”

செயலர்:- ???
.......................................................................................................................................................
ஒரு கடி
“அந்த கப்பல் ஏன் ரொம்ப ஆடி ஆடி வருது?”

“அதுவா அது ‘சரக்கு கப்பல்’ அதான் ஆட்டம் அதிக இருக்கு”
.................................................................................................................................................
 ஒரு பன்ச்.

“ பேனா கத்தியால செத்தவன பார்த்திருப்ப.... கொடுவாள் கத்தியால செத்தவனை பார்த்திருப்ப.... பட்டாகத்தியால செத்தவனை பார்த்திருப்ப..... ‘கத்தி’ய பார்த்தே செத்தவனை பார்த்திருக்கியா..... இப்ப பாக்கிறியா பாக்கிறியா பாரு நல்லா பாரு..இப்ப தான் பர்ஸ்ட் ஷோ பாத்துட்டு வந்தான் அடுத்த ஷோ போடுறதுக்குள்ள இவனுக்கு இந்த நிலமை...............”

6 கருத்துகள்:

  1. அடிச்சு கலக்குவாங்க பார்த்திருக்கேன், நீங்க கடிச்சு(ம்) கலக்குறீங்க நண்பா,,,

    பதிலளிநீக்கு
  2. #வளர்கிறது
    என் காதல்.#
    எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க ,நீங்கநகத்தை வெட்டுற மாதிரி ,உங்க கழுத்தை வெட்டிறப் போறாங்க !

    பதிலளிநீக்கு
  3. கவிதை அருமை! கடிஸ் சூப்பர்! பன்ச் ஹாஹஹஹஹஹ்!

    பதிலளிநீக்கு
  4. கத்தி பன்ச் வசனமெல்லாம் போட்டு கலக்குறீங்க. ஆனா உஷாரா இருக்குங்க அவருடைய ரசிகக் குஞ்சுகள் எல்லாம் வந்து தமிழில் உள்ள அத்தனை கெட்டவார்த்தைகளும் உபயோகிச்சு திட்டுவானுங்க.

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!