திங்கள், செப்டம்பர் 01, 2014

தப்பு பண்ணலாம் வாங்க.

தெரியாது என துவண்டு கிடப்பதைவிட
துணிந்து தெரிவுச்செய் எதையும்.


தவறுகள் ஏற்படினும்
துணையாய் அமையும்.
தோல்வி உனது முதல் படி எனில்
வெற்றி என்பது இறுதிப்படியாய் இருக்கலாம்.

சும்மாய் இருப்பதைக்காட்டிலும்
சுகமாய் காலம் கழிப்பதைக்காட்டிலும்
சுறுசுறுப்பாய் சில தப்புக்களாய் செய்தாலும்
சுகம் இது தான்  சோம்பல் இல்லா வாழ்வு.


தப்புப்பண்ணலாம் வாங்க-இது
திருந்துவதற்கான வாய்ப்பு-நம்மை நாமே
திருத்துவதற்கான வாய்ப்பு.-ஆக
தினமும் பண்ணலாம் தப்பு.
தவறில்லை என்றே தோன்றுகிறது.

1 கருத்து:

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!