சனி, ஆகஸ்ட் 30, 2014

கணக்கு பண்ணிப்பார்த்தா புரியும்?...“ ஹலோ ஆஸ்பிட்டல் டீனா?...... நான் உள்துறை மந்திரி பேசறேன்... எனக்கு அடுத்த வாரம் டாக்டர் பட்டம் கொடுக்கப்போறாங்க.... எனக்கு என்னைக்கு மந்திரி பதவி பறிபோகும்னு தெரியல..அப்படி ஏதாவது ஒன்னு ஆச்சுனா
உங்க ஆஸ்பிட்டல்ல டாக்டரா வந்து வேலைக்கு சேர்ந்திடறேன் அதுக்கு இப்ப நான் என்ன பண்ணனும்?”

டீன்:- ???
........................................................

மனைவி:- “உங்களை சனியன் பிடிச்சு சரியா ஏழரை வருஷமாச்சுனு எப்படி ஜோசியர் அடிச்சு சொல்றாரு “

1:- “அதான் எனக்கும் புரியல?”

மனைவி: -“ நீங்களே நல்லா யோசிச்சிப்பாருங்களேன் “

1:- “ அவரு  சொன்ன கணக்குப்படிப்பாத்தா நமக்கு அப்பதான் நம்ம கல்யாணம் ஆச்சு”

மனைவி :- ???

“ என்னங்க ஜோசியரே ? ”

ஜோசியர்:- “அத எப்படிங்க என் வாயால சொல்லமுடியும்.”

....................................................................................................................

பிஏ:- “ தலைவரே, சந்தோஷமானச்செய்தி........ உங்களுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கப்போறாங்க ”

“அப்படியா, ரொம்ப சந்தோஷம். கொடுக்கிறது தான் கொடுக்கிறாங்க அப்படியே 'எம் எஸ்' பட்டமா கொடுக்கச்சொல்லிடு “

பிஏ :- ???
..........................................................................................................................

“உப்புசப்பு இல்லாத அந்த விஷயத்துக்கு, இந்த குதி குதிக்கிறாரே யாருங்க அவரு?”

“நம்ம உப்புவியாபாரி உலகநாதன் தான்”

............................................................................................................................

“தலைவரே!, உங்களை கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளரா அறிவிச்சிட்டாங்க “

“ஹ ஹா.. ஹா,...... அப்படியே நிரந்தர முதல்வரா ஆக்க ஏதாவது வழி இருக்கானு சொல்லு..”

???

............................................................................................................................நபர் 1 :- “ பொண்ணு பாத்துட்டு வந்ததும் அப்பாவுக்கும் மகனுக்கும் என்ன பிரச்சனை ? ”


நபர் 2 :- “ பார்த்த முதல் பொண்ணையே பிடிச்சிருக்குனு சொல்லிட்டானாம்... இன்னும் நாலு இடத்துல பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிடறது எப்படிடானு அப்பா சண்டை போடறார் அதான்.......... “

நபர் 1 :-???
.................................................................................................................

.....................................................................................................................................

7 கருத்துகள்:

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!