வியாழன், ஆகஸ்ட் 28, 2014

யாருக்கு என்னப்பெயர் வைக்கலாம்?
மனுநீதிசோழன் சும்மா பேரைக்கேட்டாலே அதிருதில்ல...
 என்று சொல்ல வைத்த அந்தக்கால அரசனின் பெயரைக்கொண்ட இந்த கால மனிதன் செய்த பத்து லட்சம் லஞ்சம் வாங்கிய கூத்து நேற்று அனைவரும் அறிந்திருப்பீர்கள்.
இப்படி லஞ்சம் வாங்க காரணம் நாம் செய்யும் குறுக்குவழி. வாங்குபவன் தப்பான ஆளாய் இருந்தாலும் முழுக்காரணம் நாம் தான் அன்றி
அவர்கள் மட்டும் அல்ல என்பதே முற்றிலும் உண்மை. சரியான முறையான ஆவணங்கள் கொண்டு நாம் வழிமுறையாய் சென்றால் இத்தகைய லஞ்ச லாவண்யங்களை ஒழிக்கலாம் என்று நாம் அறிவுரைச்சொன்னால் யாராவது கேட்கவா போகிறோம். நமது வேலை உடனே முடிய வேண்டும் நல்லவழியில் செல்ல நேரம் கிடைப்பதில்லை ஆகவே இந்த குறுக்குவழி கண்டுபிடிச்சாச்சு.... இந்தியன், நிமிர்ந்துநில் போன்ற படங்களைப்பார்த்தவுடன் நெஞ்சைநிமிர்த்தி தியேட்டரைவிட்டு வெளியே வரும் நாம் அடுத்த நிமிடம் சரணடைவது இந்த லஞ்ச லாவண்ய ஆட்களிடம் தான்... என்னசெய்வது வேற வழி இல்லை.
லோன் வாங்க மணியக்காரர் சர்டிபிகேட் வேண்டும், வீட்டுவேலை பாதியிலே நிற்கிறது.... எல் ஐ சி யில் அந்த சான்றிதழ் கண்டிப்பாக வேண்டும் என்கிறார்கள்... மணியக்காரர் நான் விசாரித்து பதினைந்து நாட்களுக்கு பிறகு தான் தருவேன் என்கிறார்...என்ன செய்வது.... ஆயிரம் ரூபாய் பேரம் பேசி பணம் கை மாறியவுடன் அடுத்த நாளே அந்த சான்றிதழ் நம்ம கைக்கு வந்துவிடுகிறது.... இப்ப எல்லாம் சரியாகிவிட்டது அவர் விசாரணை எங்கே போனது? பதினைந்து நாள் நமக்கு வீண் இல்லை ?....... இப்படி, எப்படி வேண்டுமானாலும் காரணங்கள் சொல்லிக்கொள்ளலாம்.
சரி, அதை விடுங்க. அது உலக மகா செய்தி. நாம மேட்டருக்கு வருவோம்.
 இப்படி நல்லவர்கள் பெயரை வைத்துக்கொண்டு எதிர்மறையான வேலைகளை செய்பவர்களுக்கு என்னென்ன பெயர் வைக்கலாம் என்று கொஞ்சம் சிரிப்பாய் யோசித்தால்...அப்பாடா....
செம கலக்கல் மெசேஜ் கிடைக்கும் போல...
இவர்களுக்கு இந்தஇந்த பெயர்கள் வைத்தால் எப்படி இருக்கும்...கொஞ்சம் சிரிங்க.................
நல்லவங்க பெயரை இப்படிக்கூட நாம கெடுக்கலாமோ?..........

லஞ்சம் லாவண்யம் வாங்குபவர்கள்-மனுநீதிசோழன்

அடிக்கடி கூட்டணி மாறுபவர்கள்-கொடி காத்தகுமரன்

எப்பொழுதுமே இரண்டாம்நிலை தலைவர்கள்- வீரபாண்டிய கட்டபொம்மன்

படிக்க மாட்டேன் என அடம்பிடிக்கும் பிள்ளைகள்- ராதாகிருஷ்ணன்

சத்துணவில் ஊழல் செய்பவர்கள்- காமராஜர்

எப்ப்பொழுதும் பொய்யே பேசுபவர்கள்- அரிச்சந்திரன்

தமிழ் நாட்டில் பிறந்து தமிழ் பேச தினறுபவர்கள்-திருவள்ளுவன்/கம்பன்

பொது சொத்துக்களை அபகரிப்பவர்கள்- காந்தி/நேரு

அடுத்தவர்களை சுரண்டியே வாழ்பவர்கள்- தெரேசா

கோவில் குளங்கள் போன்ற பொது சொத்துக்களை ஆக்கிரமிப்பவர்கள்-அசோகன்/இராஜ ராஜ சோழன்.

முன்னோர்களை பழி வாங்க சிறந்த ஐடியா...இதுதான்

இப்படியாக அவங்க பெயரை வைத்து அவங்க மானத்தை வாங்கிடலாம்

10 கருத்துகள்:

 1. அடேங்கப்பா சூப்பர்தான் போங்க.....ஆனா பாவம்க அந்த நல்ல மனிதர்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாம பாவம் பாக்கிறோம் அய்யா, ஆனா அந்த பேர் கொண்டவங்க பாக்கிறதில்லையே.!.

   நீக்கு
 2. ஐடியா நல்லாத்தான் இருக்கு நண்பா ஆனால் இதுக வளந்ததும் இப்படித்தான் ஆகும் நமக்கு முன்கூட்டியே தெரியலையே... வேணும்னா இப்படிச்செய்யலாம் 25 வது வயசுல எல்லோருமே கண்டிப்பாக பேரை மாற்றியாக வேண்டும் அப்படினு சட்டம் கொண்டு வந்தால் தேவலை நானும்கூட இப்போதைக்கு தகுந்தாற்போல் அப்பாவி னு பேரை வச்சுக்குவேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்த பாவி யானு யாராவது சொல்லிடப்போறாங்க. கொஞ்சம் உஷாரா இருங்க.

   நீக்கு
 3. நாட்டைக் காட்டிக் கொடுக்கம் துரோகி பகத் சிங் என்று பெயர் வைச்சுக்கலாமா ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்படித்தான் அய்யா எல்லாருமே? செயல்படுகிறார்கள்.

   நீக்கு
 4. பதில்கள்
  1. என்னங்க அய்யா செய்வது.... காலம் கெட்டுகிடக்கு.

   நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!