வியாழன், ஆகஸ்ட் 14, 2014

சுமசு.“தலைவர் இன்னும் சின்னபிள்ளைத்தனமாவே இருக்கிறாரா எப்படி?”

“சுதந்திரதின கொடியேற்றத்திற்கு பிறகு இவருக்கு சாக்லேட் கொடுக்க மறந்துட்டாங்களாம். அதனால ஸ்கூல் ஹெட்மாஸ்டர் கிட்ட கோவிச்சிக்கிட்டு வீட்டுக்கு வந்துட்டார்” 

........................................................................................................................................................

“தலைவருக்கு நம்ம நாட்டப்பத்தி ஒண்ணுமே தெரியாதுனு மீண்டும் நிருபிச்சிட்டார் “

“எப்படி சொல்றீங்க?”

“தேசியக்கொடியைப்பார்த்து இது எந்த கட்சிக்கொடி அப்படினு கேட்க்கிறாரே “
.....................................................................................................................................................

“நம்ம தலைவர் ஆனாலும் இம்புட்டு தைரியமா பேசக்கூடாதுப்பா “

 “ அப்படி என்ன பேசினார் “

“பாகிஸ்தானை இந்தியாவோட இணைத்தே தீருவேன் அப்படினு சொல்றாரே “
............................................................................................................................................................

 “ என்னங்க இது,  நம்ம தலைவர் பன்றது அநியாயமா இருக்கே ? “

“அப்படி என்னப்பா பன்னார் ?”

"அவரோட நியுமராலஜிப்படி ஆகஸ்ட் 15 நல்ல நாளா இருக்கிறதில்லையாம். அதனால சுதந்திர தினத்தை மாத்தி வைக்கச்சொல்லி பிரதமருக்கு கடிதம் எழுதுராரே “
.........................................................................................................................................................

“ஒருவார காலம் என்னை நிதியமைச்சராக்குங்கள் சுவிஸ் பேங்கில் உள்ள எல்லா கருப்புப்பணத்தையும் நான் மீட்டுத்தருவேன்” -

திருவாளர். சுப்பரமணியச்சுவாமி.

இங்க என்ன முதல்வன் படமா ஓடிகிட்டு இருக்கு. மோடி அரசு என்பதை மறந்துட்டாருபோல. சந்தடி சாக்குல அமைச்சரா ஆகிப்பாக்கலாம்னு ஆசை வந்திடுச்சோ?
இப்படி ஜோக்காக பேசும் தலைவர்களை நினைத்தால் மேலே கண்ட நகைச்சுவைகள் தானாக வந்து குவிகிறது. நன்றி சுமசு அவர்களுக்கு.
................................................................................................................................. 
சுதந்திரத்தின் மேன்மை

சுதந்திரமாய்
சுதந்திரம் வாங்கித்தந்த
காந்தியையும் சுட
சுதந்திரம் கிடைத்தது
சுதந்திரத்தின் 
தனிச்சிறப்பு தான்.
.....................................................................................................................................
அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
.......................................................................................................................................

14 கருத்துகள்:

 1. சுமசுவை வைத்து இப்படியும் தமாசு ?அருமை !
  த ம 2

  பதிலளிநீக்கு
 2. பதில்கள்
  1. தங்களின் மேலான ரசிப்பிற்கு மிக்க நன்றிங்க சகோ.

   நீக்கு
 3. அரசியல் துணுக்குகள் அனைத்தும் அருமை. ரசித்தேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் மேலான ரசிப்பிற்கு மிக்க நன்றிகள் அய்யா.

   நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!