புதன், ஆகஸ்ட் 13, 2014

எதையுமே வித்தியாசமாகச்செய்யுங்கள்...
எதையுமே வித்தியாசமாக செய்ய நினைக்கும் இரண்டு சர்தார்ஜிகள்.
“ஒய், எப்படியாவது நாம சீக்கிரம் பணக்காரனாக ஆகவேண்டும் என்ன செய்யலாம்?”
“சூப்பர் ஐடியா ஒய், நாம கள்ளநோட்டு அடிச்சா நீ சொன்னா மாதிரி ஆகலாம்.”
“ஓகே அதற்க்கு என்னென்ன செய்யனுமோ எல்லாம் ரெடி பண்ணு ஒய் ”
“ஓகே !.”
எல்லாம் ரெடியாகி விட்டது.....

 
நோட்டுக்களும் அடித்தாகிவிட்டது.
“ இந்தா நீ ஒரு பக்கம் போ நான் ஒரு பக்கம் போறேன். கள்ள நோட்ட நல்ல நோட்டா மாத்திகிட்டு ராத்திரி நம்ம இடத்துக்கு வந்துடு”
“ ஓகே “
இருவரும் பிரிந்து சென்றனர்.

இரவு இருப்பிடம் திரும்பிய சர்தார்ஜிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 

வாசலிலேயே போலீஸ் மடக்கி பிடித்தது.

“ எப்படிப்பா நீ முதலில் மாட்டினே ? “
“ எல்லாம் நீ செஞ்ச தப்பால தான்.”
 “என்ன தப்பு?”

 “காந்திக்கு பதிலா அவரோட சின்ன வயசு போட்டோவ ஏன் ரூபாய் நோட்டுல போட்ட?”

“அட கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேனு தான் பாதி ரூபாய் நோட்டு ல அப்படி போட்டேன்.”

“ ஆமா, நீ எப்படி இவ்வளவு சீக்கிரம் மாட்டின ? “

“அட கள்ளநோட்டா இல்ல நல்லநோட்டானு  எப்படி பேங்க் ல  கண்டு பிடிக்கிறாங்கனு தெரிஞ்சுக்க ரொம்ப நாளா ஆசை. அதான் நேரா பேங்க்குக்குப்போயி  நாம அடிச்ச ரூபாய் நோட்டைக்கொடுத்து சில்லறை கேட்டேன் “
???...........???............???..................
...............................................................................................

கருத்து கந்தசாமி:- இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால் எதையுமே வித்தியாசமாகச்செய்யுங்கள். விரைவில் பிரபலம் அல்லது பிராப்ளம் ஆவீர்கள்.
.......................................................................................................

8 கருத்துகள்:

 1. என்னத்த சொல்ல உங்க பேச்சைக்கேட்டா கம்பிதான் எண்ணனும் போலயே....நமக்கு இதெல்லாம் சரியா வராது பிட்பாக்கெட் ஒண்ணே போதும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்ப, பிட்பாக்கட் அடிச்சா கம்பி என்ன வேண்டாமோ?..... வருகைக்கு மிக்க நன்றி அய்யா.

   நீக்கு
 2. கொஞ்ச நாளா ஆளைக் காணாமேன்னு பார்த்தேன் ,இதைதான் யோசிச்சுகிட்டு இருந்தீங்களா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லைங்க அம்மா வுக்கு உடல்நிலை சுகமில்லை, அதான் வராமுடியல. இனிமே வ்ருவேன் என்று நினைக்கிறேன். நன்றி.

   நீக்கு
 3. உங்க பதிவைப் படிச்சா, பிரபலம் ஆகி, பேப்பர்ல எல்லாம் போட்டோ வரும். ஆனா கடைசில கம்பியும் எண்ண வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிரபலம் னால கூடவே பிராப்ளம் இருப்பது சகஜம் சகோதரரே.

   நீக்கு
 4. ஹாஹாஹாஅ....வித்தியாசமா செய்யலாம்தான்...ஆனா இந்த சர்தார்ஜி மாதிரி செஞ்சா.....மாமியார் வீடுதான் கதி.....

  பதிலளிநீக்கு
 5. எதையுமே வித்தியாசமாகச் செய்யுங்கள்...
  நல்ல வழிகாட்டல்

  பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!