செந்தில்(பாடல்):- “உன் புன்னகை
என்னவிலை?.....”
கவுண்டமணி:-
அய்ய்ய்ய்யோ.......விலைகேட்க வந்துட்டார்யா....... பில்கேட்ஸ்க்கு
பக்கத்துவூட்டுக்காரரு. மூஞ்சப்பாரு, காலை டிபனுக்கே டிமிக்க அடிக்கிற பரதேசி...
புன்னகையை வாங்க வந்துட்டாரு....ஏன் பத்து ரூபா தான் வாங்கிக்கிறியா.
.....ஒரு ரூவா
னா கூட நீ கடன் தாண்டி வாங்கியாகனும்...உன்னபத்தி தெரியாதா?...பாட்டப்பாரு...
............................................................................................
செந்தில்(பாடல்):- “காதல்.....
கடிதம்……. வரைந்தேன்….. உனக்கு….. வந்ததா…….. வந்ததா”
கவுண்டமணி:- “ஆமா
வந்திச்சு இப்ப இன்னாங்கிற..... எங்க ‘அம்மா’ கூடத்தான் தினமும் பிரதமருக்கு
கடிதம் எழுதுராங்க...அவங்க என்ன பதிலா சொல்றாங்க... அது மாதிரி தான் நீ போட்ட
கடிதமும்...... போடா போயி பொழைக்கிற வேலையப்பாரு இல்ல பச்ச சாணி எடுத்து பச்சக்குனு
அப்பிபுடுவேன், திரும்பி பாக்காம ஓடிப்போயிடு....”
................................................................................................
செந்தில்(பாடல்):- “தென்பாண்டி
சீமையில.. தேரோடும் வீதியில...மான் போல வந்தவனே யார் அடிச்சாரோ யார் அடிச்சாரோ?”
கவுண்டமணி:- “யார்
அடிச்சாங்கனு சொன்னா நீ போயி அவங்கள திருப்பி அடிச்சுட்டு வந்துடுவியா...தெருவுல
போர நாயை ஒரு சின்ன கல்லால கூட அடிக்கத்தெரியாத நாயி நீ... யார் அடிச்சாங்கனு
கேக்கறத பாரு....பிரசாரத்துல விஜயகாந்து தான் அடிச்சாரு... போ அவர போயி திருப்பி
அடிச்சுட்டு வாயேன்.....வாயை மூடிகினு சும்மா போவியா...கேக்க வந்துட்டான் கேணவாயன்..”
.......................................................................................................
செந்தில்(பாடல்):- “கண்மணி
அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே “
கவுண்டமணி:- “ஆமா
நாயே என்னன்னு எழுதுன தெரியுமா.....காலையில என்ன சாப்ட்ட, மதியம் என்ன சாப்ட்ட,
ராத்திரி என்ன சாப்ட்ட, இப்படி எழுதனு எல்லாம் சாப்பாட்ட பத்தியே இருந்தா...அவ
முடிவு பண்ணி ரொம்ப நாளாச்சு மாப்ள. இவன் நமக்கு சரிபட மாட்டான் சரியான தீனி
பண்டாரம்னு அது தெரியாம நீ என்னன்னா
ஜாலியா பாட்டுபாடுற..இன்னோரு தடவ கடிதம் கிடிதம்னு வந்தே சுட்டுபுடுவேன் நாயே...”
.............................................................................................................
சிறந்த சுவையான பகிர்வு
பதிலளிநீக்குமிக்க நன்றிங்க அய்யா.
நீக்குநல்ல நகைச்சுவை.
பதிலளிநீக்குஅவர்கள் இருவரும் பேசிக்கொவது மாதிரியே படித்தேன். நன்றாக இருந்தது.
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றிங்க ஐயா.
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குகாலைப் பொழுதில் மனதுக்கு இதமான நகைச்சுவை கண்டு மகிழ்ந்தேன் சுற்றும் படம் அருமை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அன்பின் நன்றிகள் பல சகோ.
நீக்குரசித்தேன் நண்பரே
பதிலளிநீக்குதங்களின் ரசிப்பிற்கு மிக்க நன்றிகள் அய்யா.
நீக்குகவுண்ட மணி வாய்ஸ் மாடுலேசனை நன்றாக நினைவில் வைத்துக் கொண்டு எழுதி உள்ளீர்கள் அருமை !
பதிலளிநீக்குத ம 2
உங்களைப்போல வருமா> ரசிப்பிற்கு மிக்க நன்றி.
நீக்குஹா... ஹா...
பதிலளிநீக்குரசித்தேன்...
தங்களின் மேலான நகைப்பிற்கு ஈடு இணை உண்டோ? நன்றிங்க.
நீக்குஹாஹா...அப்படியே கவுண்டமணி ...செந்தில் வாய்ஸ்ல கற்பனை பண்ணிப் பார்த்தோம்....ஹாஹஹஹ....சூப்பர்! ரசித்தோம்!
பதிலளிநீக்குதங்களின் அதீத ரசிப்பிற்கு மிக்க நன்றிகள் அய்யா.
நீக்குஉண்மையிலேயே.. கவுண்டமணிக்குறிய வசனமே,,, வாழ்த்துக்கள் நண்பா...
பதிலளிநீக்குஎன் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழர்.
நீக்கு