வெள்ளி, ஜூலை 11, 2014

வாங்கப்போறீங்களா? கொஞ்சம் பார்த்து வாங்குங்க!.


இதை சொல்வதற்காக வியாபாரிகள் மன்னிக்கவும்.
ரோட்டில் தள்ளுவண்டிகளில் பழங்கள் காய்கறிகள் விற்பனை என்பது இப்பொழுது சர்வசாதாரணமாக ஆகிவிட்டது.டாடாஏஸ் என்ற குட்டி யானை வண்டியிலும் கொட்டிக்கொண்டு வந்துவிடுகிறார்கள் பழங்கள் காய்கறிகள் அனைத்தையும்.
 
இப்படி ஒரு தள்ளுவண்டிக்காரர் பழங்களை விற்றுக்கொண்டு வந்தார். எல்லோரும் வாங்கிக்கொண்டு இருந்தார்கள். அவருக்கு உடல்நிலை சரியில்லைப்போலும். அடிக்கடி இருமுவதும் தும்முவதுமாக இருந்தார். அப்படி அவர் செய்கையில் அவரது எச்சில்கள் பழங்களின் மேல் விழுந்தது முகத்தை துடைத்த கைகளுடன் பொருட்களை எடுத்துப்போட்டுக்கொண்டிருந்தார். சுரீர் என்றது...
அவருக்கு இருக்கும் வியாதியை பழங்களுடன் சேர்த்து மற்றவர்களுக்கு இலவச இணைப்பாக தருகிறாரோ? என்ற கோபம் வந்தது.
வியாபார அன்பர்களே! கொஞ்சம் உடல்நிலை சரியில்லாதபொழுது ஓய்வெடுத்துக்கொண்டு அல்லது வேறு வழிகளில் சுத்தமாக விற்பனை செய்யுங்கள்.
தயவுச்செய்து பலம் பெற வாங்கும் பொருட்களால் பலவீனப்பட வைத்துவிடாதீர்கள்.
என்ன செய்வது வாங்கும் நபர்கள்  இது போன்ற சில விஷயங்களில் கவனமாக இருந்தால் உடலுக்கு நல்லது.

2 கருத்துகள்:

 1. உண்மைதான் நண்பரே
  நாம்தான் கவனமாகப் பார்த்து வாங்க வேண்டும்
  நன்றி
  தம 1

  பதிலளிநீக்கு
 2. அவர்களுக்கு என்ன கஷ்டமோ ?நாம் அப்படிப் பட்டவர்களிடம் வாங்குவதை தவிர்க்க வேண்டும் !
  த ம 3,3,3

  பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!