கண்டிப்பாக உங்களுக்குத்தான் இந்த பதிவு என்பதில் எள்ளளவும்
சந்தேகம் இல்லை.
வெள்ளியோ தங்கமோ
வாங்கிய பொருட்களை விற்கப்போனால் கொள்ளை லாபம் கடைகாரருக்கு. மகா நட்டம் நமக்கு
என்பதினை எத்தனை தடவை எடுத்துச்சொன்னாலும் புரியாதவர்கள் இருக்கிறார்கள். ஒரு பவுன் என்பதினை உதாரணமாக கொள்வோம்.
ஒருபவுன் தற்போதைய விலை 23000 என வைத்துக்கொள்வோம்.
ஒரு பவுன் பழைய
நகையை கடைக்காரரிடம் கொடுத்து என்ன விலை போடுகிறீர்கள் என்று கேட்போம். அவர்
முதலில் அதன் லேபிலைப்பார்ப்பார் எங்கு வாங்கப்பட்டது என்பதை அறிந்துக்கொள்வார். கடையின்
பெயர் ஊர் இவற்றை கொண்டும் அதன் தரம் நிர்ணயித்துக்கொள்வார். இது வேறகடை நகை,
செம்பு நிறைய கலந்திருக்கு அப்படி இப்படி என்று கூறிவிட்டு
ஒருகிராமுக்கு ரூ
2000 தரலாம், மொத்தம் எட்டு கிராமில்
ஒருகிராம் சேதாரம் தள்ளுபடி போக மீதி 7 கிராம், 7கிராமுக்கு கிராம் 2000 வீதம்
7*2000=14000 தருவதாக பில் போடுவார்.
நாம்
பாத்துபோடுங்க ஓனரைத்தெரியும் அப்படி இப்படி என கேட்டால் ஏதோ வேண்டா வெறுப்பாக
சரிங்க 500 ரூபாய் சேர்த்துபோடுகிறேன் இதுக்குமேல் தர முடியாது என கண்டிப்பாக கூறி
விடுவார்.
அதாவது பழைய நகை ஒரு பவுன் 14500 க்குத்தான்
விற்கிறோம்.
இப்ப புது நகை
ஒரு பவுன் ரூபாய் 23000. அதற்க்கு செய்கூலி சேதாரம் எல்லாம் சேர்த்து 24500 க்கு மேல்
போடுவார். நாம் பழைய பல்லவியை பாடுவோம் அவரைத்தெரியும் இவரைத்தெரியும்...உங்க
கடையிலே தான் எப்பவும் வாங்குவோம்....என்று. சரி சரி உங்களுக்காக என்று கூறிவிட்டு ரூ 200 குறைப்பார். ஆக நாம் புது நகைக்கு கொடுப்பது
24300. நமது பழைய நகை விற்றது வெறும் ரூ 14500 இப்ப ரூ 9800 அதிகம் தாங்க என்பார்.
சிலபேர் பேரம் பேசாமல் கேட்ட தொகையை கொடுத்துவிடுவார்கள்... சிலர் வம்படி தும்படி
செய்து குறைப்பார்கள்.
ஆக நமக்கு இது பயங்க நட்டம். பழைய நகையில்
சேர்த்துப்போடுகிறேன் புது நகையில் குறைக்கிறேன்
என ஏதேதோ கணக்குப்போட்டு எப்படி எப்படியோ குறைந்தது ரூ 5000 மாவது நம்மிடம்
பிடிங்கி விடுவார்கள்.
அதாவது ஒரு பவுன்
தங்க நகையை விற்று, ஒரு பவுன் புது நகையை வாங்கினால் குறைந்தது நமக்கு ரூபாய் 5000
மேல் நஷ்டம்... எத்தனை பவுன் விற்கிறோமோ அத்தனைஅத்தனை லாபம் கடைக்காரர்களுக்கு.
அதனால் அனைவருக்கும்
ஒரு சிலவார்த்தைகள்,
கஷ்டப்பட்டு
சம்பாரித்து வீண் ஆடம்பரத்துக்காக அடிக்கடி மாடலை மாற்றுகிறேன் இது பழைய மாடல் ஆகிவிட்டது
என்று மாற்றிக்கொள்வதை நிறுத்திக்கொள்ளலாம்.
வாங்கி பத்து
வருடங்களுக்கு மேல் ஆன நகைகளை மாற்றலாம் ஏன்னா அப்ப வாங்கும் போது குறைந்த
விலையில் வாங்கி இருப்போம்.இப்ப விற்கும் போது அவ்வளவு நஷ்டம் வராது.
எந்த கடையில் வாங்கினீர்களோ அதே கடையில்
விற்கவும். அவர்கள் கடை நகைகள் என்றால் சற்று பணம் உயர்த்தி தருவார்கள். ஆனால் நஷ்டம்
என்பது தவிர்க்க முடியாதது தான்.
ரேட் கார்ட், ஒரே
விலை, தள்ளுபடி, செய்கூலிசேதாரம் இல்லை என்றெல்லாம் நம்மை கவர
காத்துக்கொண்டிருக்கிறார்கள். கவனமாகச்செயல்படுங்கள்.
இந்த பொம்பளைங்களே இப்படித்தான் நண்பா,,, போறபோக்கை பார்த்தா கணவனைகூட பத்து வருசமாச்சு பழசாப்போச்சுனு சொன்னாலும் சொல்வாங்க,,, வாங்க நாமபாட்டுக்கு கைவண்டியை இழுப்போம் அப்பத்தான் வாழ்க்கை வண்டி ஓடும்.
பதிலளிநீக்குஅவங்க கேட்டது கிடைக்கலனா மாற்றம் உண்டாகுமோ ?
நீக்குமிக்க நன்றி அய்யா, தங்களின் மேலான கருத்துரைக்கு.
பயனுள்ள பதிவு நண்பரே
பதிலளிநீக்குமிக்க நன்றிங்க அய்யா.
நீக்குஉதாரணத்தைக் கொண்டு சொன்னது மிகவும் யோசிக்க வைக்கிறது.
பதிலளிநீக்குஉண்மை தான் ஆடம்படத்துக்காக வாழாமல், தேவைக்காக வாழ்ந்தால் இந்த பிரச்சனை எல்லாம் வராது.
மிகவும் பயனுள்ள பதிவு. வழ்ழ்த்துக்கள்.
தங்களின் மேலான வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் அய்யா.
நீக்குஅடிக்கடி மாற்றிக்கொள்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்...
பதிலளிநீக்குநன்றிங்க.அய்யா.
நீக்குஎக்சேஞ் என்பதே ஏமாற்று வேலைதான் ,இது எங்கே வீட்டு பொம்மனாட்டிகளுக்கு புரியறது ?ஆசை அறிவை மழுங்கச் செய்கிறது ,வாழ்கிறார்கள் வியாபாரிகள் !
பதிலளிநீக்குத ம 2
உண்மை தாங்க அய்யா. மிக்க நன்றி
நீக்குசிறந்த வழிகாட்டல்
பதிலளிநீக்குதொடருங்கள்
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றிகள் அய்யா.
நீக்குவழிக்காட்டி பதிவு அருமை
பதிலளிநீக்குமிக்க நன்றிங்க அம்மா.
நீக்குஉபயோகமான தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி!
பதிலளிநீக்குதங்களின் மேலான வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் அய்யா.
நீக்குநன்றாகவே புரியும்படி புள்ளி விவரத்துடன் சொன்னீர்கள். தங்க நகைகளில் முதலீடு என்பதே ஒரு மாயவலை. கூட்டிக் கழித்துப் பார்த்தால் லாபம் என்பதே இல்லை.
பதிலளிநீக்குத.ம.2
தங்களின் கருத்துரைக்கும் வருகைக்கும் மிக்க நன்றிங்க அய்யா.
நீக்குநல்ல விளக்கத்துடன் பதிவு அருமை நண்பரே!
பதிலளிநீக்குமிக்க நன்றிங்க அய்யா.
நீக்குநகையில் முதலீடென்பது சுத்த அசட்டுத்தனம்,மிகத் தெளிவாக விளக்கியுள்ளீர்கள், ஆனால் இது பெண்களுக்கு விளங்கவே விளங்காது. சில ஆண்டுகளுக்கு முன் துக்ளக்கில் ஒரு கட்டுரை வெளிவந்தது.
பதிலளிநீக்குநீயா நானாவிலும் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதில் பணமிருந்தால் சேமிப்பாக தங்கக் காசுகளைச் சேமிக்கும்படி கூறினார்கள்.
சென்ற ஆண்டு இந்தியா வந்த போது, கொண்டுவந்த தங்கக் காசில் நகை
செய்யச் சென்ற போது, அச் சவரன் காசையே புரட்டிப் புரட்டி பார்த்து விட்டு, கலப்பு அதிகம் என்றாரே ,அந்த நகைக்கடை உரிமையாளர்.
அந்த அளவு நம் தலையை உருட்டுவதிலே கண்ணாக இருப்பார்கள்.
ஏமாற்று என்பது அவர்களுக்குக் கைவந்த கலை.
தங்களின் மேலான கருத்துரைக்கும் வருகைக்கும் மிக்க நன்றிகள் அய்யா.
நீக்குதகவலுக்கு மிக்க நன்றிங்க.
பதிலளிநீக்கு