திங்கள், ஜூலை 14, 2014

கல்யாணம் ஆகா கல்யாணம்.

"கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் ஆச்சு... இன்னைக்கு என்னவோ அவரோட கல்யாண சிடியை போட்டு ரிவைண்ட் பண்ணி பண்ணி பாக்கிறாரே ஏன்?"

 " நண்பன் யாரோ கேட்டானாம் நீ கடைசியா சிரிச்சது எப்போனு, அதான் சிடியை போட்டுஅவர் சிரிச்சதை ரிவைண்ட் பண்ணி தேடித்தேடி பாக்கிறார் "

.............................................................................................................................................................

கணவர்:- "அம்மா கிட்ட இருந்து லட்டர் வந்திருக்கு பணம் அனுப்ப சொல்லி இருக்காங்க "

மனைவி:- " வயசான காலத்துல அதுக்கு எதுக்கு பணம் அனுப்ப முடியாதுனு கரெக்டா சொல்லிடுங்க.கல்யாணம் ஆகி எத்தனை வருஷம் ஆவுது நமக்கே புள்ளகுட்டிங்க செலவு அதிகம்.......மாசாமாசம்  இது ஒரு தெண்ட செலவு "

கணவர்:- "சரி சரி அப்படியே உங்க அம்மா கிட்ட சொல்லிடறேன். லெட்டர் போட்டு இருக்கிறது உங்க அம்மா தான்"

மனைவி:- "அய்யய்யோ எங்க அம்மாவா? "

.................................................................................................................................................................

"கல்யாணத்துக்கு என்னங்க உரம் பூச்சி மருந்தெல்லாம் கிப்டா கொடுக்கிறீங்க? "

"கல்யாணம் ஆயிரம் காலத்து பயிர் இல்லீங்களா? அதான் பயிர் நல்லா வளர இதெல்லாம் கொடுக்கிறேன் "
................................................................................................................................................................

11 கருத்துகள்:

 1. பூச்சி மருந்தை சாப்பிட சொல்லுங்க ,கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் பட்டதாச்சே !
  த ம 3

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜி , பூச்சி மருந்து சாப்பிட்ட அவங்க வேணா சொர்க்கம் போகலாம்... ஆனா கொடுத்த நம்ம ஆளு மாமியார் ? வீட்டுக்குத்தான் போகணும் .

   நீக்கு
 2. ஆயிரம் காலத்துப் பயிருக்கு உரம், பூச்சி மருந்தா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவருக்குத்தெரிஞ்சது அதான் ஐயா போலும்.

   நீக்கு
 3. பதில்கள்
  1. மிக்க நன்றிங்க தங்களின் நகைப்பிற்கு.

   நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!