ஞாயிறு, ஜூலை 13, 2014

இவிங்க இப்படித்தான்.“ஐஸ்கிரீம் கடைக்காரர் காதலிகிட்ட எப்படி பேசுவார்?”

“ 'உருகி உருகி' தான்”
.................................................................................

“இரும்பு வியாபாரியை காதலிச்சது தப்பாப்போச்சி”

“ஏன்?”

“திடீர்னு 'கம்பி' நீட்டிட்டான்”
...................................................................................
“காரம்சாரமா வாக்குவாதம் செய்யறாரே அவரு யாருங்க?”

“நம்ம 'மிளகாய்' வியாபாரி தாங்க”
...................................................................................
"அந்த கடைக்காரர் புதுசாகட்டுன வீட்டுக்கு மேல பெட்டி மாதிரி டிசைன் பண்ணி இருக்காரே ஏன்?" 

"வீடு கட்டின காசெல்லாம் 'பெட்டி'க்கடையில சம்பாரிச்சதாம் அதை சிம்பாலிக்கா சொல்றாராம்" 
...................................................................................

"டாக்டர் ஏன் சாப்பிடாம கோபமா போறார்?"

"சாம்பார் 'ஊசி'ப்போச்சாம் அதான்"
...................................................................................
"எங்க வீட்டுக்காரரை எல்லாரும் மரியாதையாதான் கூப்பிடுவாங்க"

"ஓ! அவ்ளோ பெரிய ஆளா, எப்படி ?" 

" 'திரு'டன் னு தான்"
.............................................................................
"என்னம்மா நர்ஸ், நம்ம ஆஸ்பிட்டல்ல இன்னைக்கு எல்லாரும் நாய்களுடன் வந்திருக்காங்க?"

"அந்த போர்ட பாருங்க டாக்டர் இங்கே அனைத்துவகை நோய்களுக்கும் மருத்துவம் பார்க்கப்படும் அப்படினு எழுதரதுக்குப்பதிலா அனைத்துவகை நாய்களுக்கும் மருத்துவம் பார்க்கப்படும் அப்படினு பெயின்டர் எழுதிட்டான்" 
...............................................................................

10 கருத்துகள்:

 1. ஹாஅஹ்ஹாஹஹா.....அதுவும் கடைசி இருக்கு பாருங்க......சூப்பருங்க.....சிரிச்சு சிரிச்சு தாங்கலைங்க.......ரொம்ப ரசிச்சோம்! இப்பதான் சமீபத்துல ஜோக்காளி பகவான் ஜி இந்த மாதிரி ஒரு எழுத்து பிழையானாலும் அர்த்தமே மாறிடுதுனு ஜோக்கடிச்சு பதிவு போர்ருருந்தாரு....அப்படித்தான் இந்த நோய் நாயானதும் ஹாஹாஹாஅ.....அவரு வருவாரு பாருங்க இதுக்கு அசத்தலான கமென்டோட.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் கருத்துரைக்கு மிக நன்றிங்க ஐயா,நீங்க சொன்னா மாதிரியே போடிருக்காரு பாருங்க ஒரு போடு.

   நீக்கு
 2. எல்லா மனித நாய்களுக்கும் மருத்துவம் பார்க்கப்படும்னு எழுதி இருந்தால் ,டாகடர் நாய்க்கடி பட்டே செத்து போயிருப்பாரே ?
  த ம 4

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கமெண்டிலேயே சிரிக்க வைக்கிறீங்க ...எப்பூடீ?

   நீக்கு
 3. அனைத்தும் அருமை நண்பரே நாய்கடி ஸூப்பர்.

  பதிலளிநீக்கு
 4. பதில்கள்
  1. மிக்க நன்றிங்க தங்களின் முத்தான சிரிப்பிற்கு.

   நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!