திங்கள், ஜூலை 14, 2014

கதம்பம். நூல்நிலையங்களில் இன்றும்
கட்டித்தான் வைக்கப்படுகின்றன-
எழுதுகோல்கள்.
படித்து என்ன பயன்?.

.....................................................
திருடுபவனுக்கு
தெரிவதில்லை
தேடியவனின் வலி.
...........................................................
வெற்றியோ தோல்வியோ
வருவதை பார்த்துக்கொள்ளலாம்.
வீரமுடன் களத்தில்
இறங்குவதுதான்
வீரனுக்கு
அழகு.
................................................................
நீ
எந்த  ‘மதம்’
வேண்டுமானாலும் இரு.
‘தாமதம்’ இன்றி
வேலை
செய்யப்பழகினால்
தரணியாளலாம்.
..............................................................


 
15.07.2014
இன்று கர்ம வீரர் காமராஜரின் பிறந்த நாள். இதனை ஆண்டுதோறும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடி வருகிறோம். இவரைப்பற்றி அநேகம் அறிந்திருப்போம் மேலும் அறிய இங்கே செல்லுங்கள் சுவையான தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. காமராசர்-தமிழ்விக்கிப்பீடியா விலும் காணுங்கள்.

 நானறிந்த ஒரு சுவையானச்செய்தி.

இவர் சிக்கனத்திற்கு மிக பெயர் பெற்றவராம்.சட்டசபை கூட்டத்தில் அமைச்சர்கள் நாங்கள் எல்லோரும் சிங்கப்பூர் போன்ற வெளி நாடுகளுக்குச்சென்று சாலைவசதி மேம்பாடுகளை, நேர்த்திகளை நேரில் பார்த்து வர அனுமதி கோரினார்களாம். அதனை பார்த்து தமிழகத்தில் செயல்படுத்தலாம் என்றார்களாம். விடுவாரா நம்ம சிக்கனவாதி, வெளி நாடுகளுக்கு அரசுமுறையில் சென்றுவர அநேக ரூபாய் அரசாங்கம் செலவிட வேண்டும் என்பதை நன்கு யோசித்து.....அங்க ஏங்க போறீங்க நேரா ஒரு பஸ்ஸை எடுத்துக்கிட்டு எல்லாரும் மதுரைக்கு போங்க.... தெரு வசதிகளை நேர்த்தியை பாருங்க அதைவிட சிறப்பா எந்த நாட்டுலயும் இருக்க முடியாது  அப்படினு ஒரு போடு போட்டாறாம்... வெளிநாட்டுப்பயணம் அப்புறம் எப்படி போய் இருப்பாங்க?.
 வாழ்க நாமம்.!
..................................................................................................................................  

15 கருத்துகள்:

 1. "நீ
  எந்த ‘மதம்’
  வேண்டுமானாலும் இரு.
  ‘தாமதம்’ இன்றி
  வேலை
  செய்யப்பழகினால்
  தரணியாளலாம்." என்பது
  உண்மையே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் ஐயா.

   நீக்கு
 2. ஒவ்வொரு வரிகளும் அருமை. குறிப்பாக திருட்டைப் பற்றியும், தமாதத்தைப் பற்றியும் சொன்னது அருமை.

  பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த தினத்தை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றிங்க ஐயா.

   நீக்கு
 3. சுவையான செய்தி உட்பட அனைத்தும் சிறப்பு... பாராட்டுக்கள் தோழர்...

  பதிலளிநீக்கு
 4. வணக்கம்
  மிக நன்றாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 5. காமராசரின் ஆன்மாவுக்கு இந்தபதிவு சமர்ப்பணம் ஆகட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழகத்தில் கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் புகழ் நிலைக்கட்டும். நன்றிங்க.

   நீக்கு
 6. காமராஜர் பற்றிய பதிவிற்கு பாராட்டுக்கள்! கவிதைகள் அருமை!

  பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!