அடுத்து என்ன படிக்கலாம்? அலசுகிறார்கள் நமது ஆய்வாளர்கள்.
"அண்ணே நான் அடுத்தது என்ன படிக்கலாம் அண்ணே?"
இந்த கேள்வியை இவங்ககிட்ட கேட்டா பதில் என்ன...
கவுண்டமணி:- "அட நாயே நீ ஒன்னாவதே படிச்சு முடிச்சு இருக்கமாட்டியே... கேள்வியப்பாரு நாசமாப்போன நாரவாயனுக்கு...கோபத்தை கிளப்பாதே உதைக்கிறதுக்குள்ள ஓடிப்போயிடு நாயே..."
"அண்ணே நான் எட்டாவது பாஸ்ணே, நீங்க பத்தாவது பெயில்ணே..."
"எட்டாவது பாஸ்னா நேரா டாக்டரா ஆ யிடறியா நாயே...... இல்ல ஜில்லா கலெக்டர் ஆயிடறியா? எகத்தளத்தப்பாரு எருமை மாட்டு தலையனுக்கு"
"ஆங் இவரு சரிபட மாட்டாரு வேற யாரயாவது கேப்போம்."
பத்திரிக்கை ஆசிரியர்:- "அதுவா தம்பி முதல்லதினமலர் படி அப்புறம் தினதந்தி படி அப்புறம் தினகரன்.... குமுதம் படி அடுத்தது குங்குமம் படி அப்புறம் ராணி படி இப்படி தொடர்ந்து படிக்கலாம்பா"
"அய்யோ எனக்கு யாருமோ உதவிசெய்ய மாட்டேன்றாங்களே...."
ஒரு சமையல்காரர் எதிரில் வருகிறார்
"அண்ணே எனக்கு ஒரு உதவி செஞ்சுட்டுப்போங்கண்ணே"
என்னப்பா
ஆங் படிச்சு என்னத்தப்பண்ணப்போற பேசாம வடிக்க கத்துக்கோ...நாலு காசு இப்ப இருந்தே சம்பாதிக்கலாம்
செந்தில் அழுதுக்கொண்டே யோவ் போய்யா வேலைய பாத்துக்குனு.... படிக்கிற புள்ளய பாத்து என்ன சொல்லிட்டுப்போற.... எட்டாவது படிச்சுட்டு அடுத்து என்ன படிக்கணும்னு ஆர்வத்துல கேட்டா இப்படி புலம்ப விடறீங்களே! ஆமா நீங்க எங்க இருந்து வறீங்க....
அந்த கல்யாணத்துக்கு போயிட்டு வரேன் அங்க தாங்க நாங்களும் போகனும்
வழி எப்படி ?"
வழிசொல்ல....

"சரி சரி வாங்கண்ணே நம்ம படிப்ப பத்தி அப்பறம் பேசிக்கலாம் முகூர்த்தத்துக்கு
நேரமாவுது"
"அய்யோ இவர்தான் அய்யரு... போயி மந்திரம் சொல்லாட்டி கல்யாணம் நின்னுபோயிடும்
பாரு... பந்தியில உக்காந்து பன்னி மாதிரி திங்கிற மூஞ்சிக்கு.....தீனிக்கு நேரம்
ஆகுதுனு சொல்லு ஒத்துக்கறேன் முகூர்த்தத்துக்கு நேரம் ஆவுதாமாம் நேரம்....சரி வா
நாயே...போய் தொலைப்போம்."
“அண்ணே பந்தல்ல வாழ மரத்தை ஏண்ணே கட்டி வச்சிருக்காங்க?”
“கட்டலனா உன்ன மாதிரி பரதேசிகள் எடுத்துக்குனு போயிடுவாங்க அதனால தான்”
“அய்யோ அது இல்லண்ணே”
“அத கட்டலனா கீழே விழுந்துடும் அதனாலதான்ணே கட்டி வச்சிருக்காங்க”
“ஐயோ…. ஜோக்கு அடிச்சிட்டாராம் ஜோக்கு. எல்லாரும் வந்து சிரிச்சுட்டு போங்கப்பா
இல்லனா பாக்கும்போது கடிச்சி வச்சிடுவான். இவன் கடிக்கிற கடி தாங்க முடியலியே....
உன்ன யார்டா இப்படியெல்லாம் யோசிக்க சொல்லி குடுக்கிறாங்க? உன்ன அப்புறம்
வச்சிக்கிறேன்.... முதல்ல உள்ளவா நாயே.....”
“அண்ணே அங்க பாருங்க அய்யரு பொண்ணு மாப்பிள்ளைக்கு இப்பவே பொய் சொல்ல
கத்துதராரு”
“என்னடா சொல்ற”
“அம்மிய மிதிச்சுட்டு அருந்ததி பாருங்கனு சொல்றாரே அவங்களும் மேல
பாக்கிறாங்களே... மேல காங்கிரீட் தளம் தானே தெரியும்.....”
“அய்யோ இவன் தொல்லை தாங்க முடியலியே, டேய் அதெல்லாம் ஐதீகம் டா அதையெல்லாம்
கிண்டல் பண்ணக்கூடாது நாயே”
“சரி சரிண்ணே......இன்னும் ஒரே ஒரு சந்தேகம்”
“கேட்டுத்தொலை...வேணாம்னு சொன்னா விடவா போற...”
“தாலி கட்டும்போது ஏன்ணே கெட்டி மேளம் வாசிக்கிறாங்க...அப்ப இம்மாம் நேரம்
வாசிச்சது என்ன மேளம்ணே?”
“அப்படிக்கேள்றா எருமைக்குப்பொறந்த பன்னிக்குட்டி...அது வந்து...தாலிக்கட்டும்போது
எல்லாரும் மணமக்களை வாழ்த்துவாங்கனு சொல்லமுடியாது...அந்த நேரத்துல சில அமங்கள
வார்த்தைகளைக்கூட உன்ன மாதிரி அய்யோக்கியங்க பேசிக்கிட்டு இருப்பாங்க... சந்தோஷமான
நேரத்துல அந்த கெட்டவார்த்தைகள் யார் காதிலேயும் விழக்கூடாது என்பதற்காகத்தாண்டா
கெட்டிமேளம் வாசிக்கிறாங்க...இப்பவாவது ஒரு உருப்படியான கேள்வி கேட்டியே வா கொட்டிக்கப்போலாம்”
“அது என்னண்ணே பட்டம் கட்றாங்க அவிங்க எந்த நாட்டுக்கு ராஜாராணி ஆகப்போறாங்க?”
“அப்பா சாமி இப்பவாவது அவனுக்கு நல்லபுத்தி குடுத்தியே....அடேய் எருமுட்ட
தலையா இதுல நிறைய நல்ல செய்திகள் அடங்கி இருக்குடா”
“சொல்லுங்கண்ணே நானும் தெரிஞ்சுக்கறேன்”
“அதாவது மாமியார் பட்டம் நாத்தனார் பட்டம் அப்படினு பலபேர் பட்டம் கட்டுவாங்க
காரணம் என்னனா என் வீட்டில் இத்தனை நாள் நான் ராணியாக அம்மா என்ற உரிமையில் ஆட்சி செய்துக்கொண்டிருந்தேன் அந்த உரிமையை என்
மருமகளாகிய உனக்கு பட்டமாக சூட்டுகிறேன் என் மகன் மீதான உரிமை உனக்கும்
உண்டாகட்டும் என்பது மாமியார் மருமகளுக்கு கட்ற பட்டத்தின் அர்த்தம்.
நாத்தனார்களும் என் அண்ணன் அல்லது தம்பி மீது எங்களுக்கு எப்படி உரிமை இருக்கிறாதோ
அதேப்போல் உன்மீதும் எங்களுக்கு உரிமை உண்டு
எங்கள் வீட்டில் அனைத்து உரிமைகளினையும் உனக்கும் பகிர்ந்தளித்து உன்னை
எங்கள் வீட்டு பட்டத்து ராணியாக ஏற்றுக்கொள்கிறோம் இப்படினு அவங்க சொல்றதா
அர்த்தம்.
அதே மாதிரி தான் மருமகனுக்கும்
எங்கள் வீடுப்பெண்ணை உனக்கு மணம் முடிப்பதன்மூலம் அவளின் மீதான முழு உரிமையை
உனக்களித்து எங்கள்வீட்டு அரசனாக எங்கள் வீட்டு மகனின் மருஉருவாக மருமகனாக எல்லா
உரிமையும் அளிக்கிறோம் இப்படி நிறய அர்த்தம் இருக்கு கல்யாண சடங்குகள்ள நாம தான் சரியா
புரிஞ்சிக்காமயே செஞ்சிட்டு இருக்கோம்.”
“உங்களுக்கு மட்டும் எப்படி அண்ணே இதெல்லாம் தெரியுது..?”
“அடேய் அதுக்குத்தாண்டா நாலு பெரியவங்க கூட பேசணும் பழகணும்..நீயும் தான்
பழகறே நாலு பன்னிங்க கூட உனக்கு எப்படி புத்திவரும்”
சரி சரி அதென்ன நாத்தனாரு கொத்தனாரு?”
“அடேய் அது நாத்தனார் இல்ல. நாற்று ஆனார். அதாவது நெல்லு பயிருக்கு நாற்று ஒரு
இடத்துல விட்டு வேற இடத்துல பிடுங்கி நடறோம் இல்ல, அதுபோல இந்த வீட்டுப்பெண்கள் இங்க
இருந்து அப்புறம் மாமியார் வீட்டுக்கு மாறிப்போறாங்க இல்ல.....இது நாற்றுபோல ஒத்து
இருந்ததால நாற்று+ஆனார்= நாற்றானார் அப்படினு சொன்னாங்க காலப்போக்குல அது
நாத்தனாரா ஆகிப்போச்சு..
டேய் இப்படி சொல்லிகினே போலாம் முன்னோர்கள் சடங்குகளைப்பற்றி..... நேரம்
ஆகும் பரவாயில்லயா?”
“அய்யோ அண்ணே இப்பவே பசிக்குது வாங்க சாப்பிடப்போலாம் அங்க எல்லாம்
காலியாகிடப்போகுது....
அண்ணே பந்தியில வடய பாத்ததும் ஒரு சந்தேகம் வருதண்ணே, ‘வட’நாடு இருக்கும்போது
போண்டாநாடு பஜ்ஜிநாடும், ‘கொட’நாடு இருக்கும்போது தொப்பிநாடு குள்ளாநாடு எல்லாம்
இருக்கணும் தானே அதெல்லாம் எங்கண்ணே இருக்கு?”
அப்படிக்கேள்றா என் சிங்கக்குட்டி... இதையே கல்வெட்டா செஞ்சு பக்கத்துலயே
உக்காந்துக்க உனக்கு பின்னாடி வர சந்ததிகள் எல்லாம் படிச்சு தெரிஞ்சுக்கட்டும்
ஆமாம் இதையெல்லாம் கேக்கசொல்லி யாருடா சொல்லிகுடுத்தா?”
“என் மூளை தாண்ணே”
வணக்கம்
பதிலளிநீக்குநல்ல உரையாடல் வடிவில் பதிவை எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றிங்க தோழர்.
நீக்குநகைச்சுவைத் ததும்பும்
பதிலளிநீக்குஅருமையான உரையாடல்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
உற்சாகமூட்டும் கருத்துரைக்கு மிக்க நன்றிங்க ஐயா.
நீக்குtha.ma 2
பதிலளிநீக்குமிக்க நன்றி ஐயா.
நீக்குஆஹா, ரொம்ப நாளாச்சு, இந்த மாதிரி ஒரு நகைச்சுவை உரையாடலை படித்து. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குமிக்க நன்றிகள் ஐயா.
நீக்குஉண்மையில் கவுண்ட மணி செந்தில் டயலாக் போலவே உள்ளது,பல கருத்துக்களையும் கூறியுள்ள விதம் அருமை !
பதிலளிநீக்குத ம 3
மனம் திறந்த பாராட்டுதலுக்கு மிக்க நன்றிகள் ஐயா.
நீக்குஎதிர்ப்பார்க்கவே இல்லை இப்படி ஒரு பகிர்வை...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...
அன்பின் வாழ்த்துதலுக்கு மிக்க நன்றிகள் பல.
நீக்குநல்லதொரு பதிவு வாழ்த்துக்கள் நண்பரே...
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குஅருமை
தம 5
மிக மிக நன்றிங்க ஐயா. வாழ்த்திற்கும் வாக்களிப்பிற்கும்.
நீக்கு