புதன், ஜூன் 25, 2014

காதலோ காதல்


(ஒரு ஜாலி கவிதை)

 

வீட்டில் இருப்பது திண்ணை
தோட்டத்தில் இருப்பது தென்னை
தூரத்தில் இருப்பது சென்னை
நான் காதலிக்கிறேன் உன்னை.


பயணிகள் போவது ஆட்டோ
அமைதி காப்பது நேட்டோ
என் நெஞ்சத்தில் உனது போட்டோ
பதில் சொல்லாமல் செல்வது உனது ரூட்டோ?.


பாடம் படிப்பது பள்ளி
மான்கள் ஓடும் துள்ளி
உன் பெயரோ வள்ளி
பதில் சொல்லடி என் கள்ளி.

குளத்தில் இருப்பது மீன்
நிஜத்தில் தவிப்பது நான்
காலம் கடத்தாதே வீண்
எனக்கு பதில் சொல்லாதது ஏன்?

வானத்தில் தெரிவது மின்னல்
வீட்டிற்கு தேவை ஜன்னல்
ஜடையில் இருப்பது பின்னல்
சேர்ந்தே சமாளிப்போம் நமது இன்னல்.

மீனைப்பிடிப்பது வலை
கடலில் அடிப்பது அலை
சிற்பிகள் செய்வது சிலை
சொல்லாமல் செய்கிறாய் கொலை.

விருந்தில் வைப்பது வடை
மழைக்குப்பிடிப்பது குடை
பொருட்களை விற்பது கடை
என் கேள்விக்கு நீ சொல்லு விடை.
 

12 கருத்துகள்:

 1. அ! டண்டனக்க டனக்கு டக்க னு T.R குரல் background ல கேட்குது:)))
  சூப்பர் !!

  பதிலளிநீக்கு
 2. உங்களுக்கு பதில் சொல்ல ,உங்கள் அவள் TRஇடம் டியூசன் படிப்பதாக கேள்வி பட்டேன் !
  த ம 2

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படிக்கட்டும் ஏன் நீங்களே இட்டுகட்ட வேண்டியது தானே?

   நீக்கு
 3. கவிதை ஸூப்பரோ.. ஸூப்பரு அருமையாக இருக்கிறது நண்பரே....

  பதிலளிநீக்கு
 4. எப்படிங்க...? இப்படி...! அசத்தல்...!!!

  பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களின் மனம் திறந்த வாழ்த்துதலுக்கு மிக்க நன்றிங்க.

   நீக்கு
 5. கவிதை அருமையாக இருக்கின்றது! அட.அட.அட.....

  டி,ஆர் நினைவைத் தவிர்க்க முடியவில்லை!!!! அவர் தன் முடியைத் தள்ளி விட்டுக் கொண்டு தங்களது இந்தக் கவிதையைச் சொன்னால்..... என்று நினைத்து வேறு பார்த்தோம்!!!!

  பதிலளிநீக்கு
 6. எப்படி நண்பரே இப்படியெல்லாம்
  அசத்துகிறீர்கள்
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!