நான் சொல்லப்போறது மூன்றுப்பெண்களின் கதை. உண்மையில்
இது
கதையல்ல நிஜம்.
வெளியூரில்.......
மூன்றாம் வகுப்பு முட்டைமுட்டைக்கண்களுடன்
அழகியப்பெண்... அழகென்றால் கொள்ளையழகு என்பார்களே அது. ஏதோ சொல்லவில்லையென
ஆசிரியர் கோபத்தில் அடிக்க அது தடித்து வீங்கிவிட்டது, மறுநாள்...அப்பாவுடன் வந்து
நிர்வாகியிடம் புகார்.அப்புறம் என்ன.?....
ஏதோ சொல்லி மன்னிப்புக்கேட்டு
தவிர்க்கப்பட்டது சண்டை. நாளடைவில் அந்த தகப்பனும் நானும் நண்பர்கள் ஆகிவிட்டோம்.
இது 1996ஆம் ஆண்டிவாக்கில் நடைபெற்றது....
அவரின் மூத்தப்பெண்ணை எங்கள் ஊரில்
கட்டிக்கொடுத்தார்.01.06.14 அன்று மூத்தப்பெண்ணின் வீட்டில் விழாவிற்கு
சென்றிருந்தேன். அப்பொழுது அவரை பார்க்க நேரிட்டது. நலம் விசாரித்தலுக்குப்பிறகு
தேம்பி தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார் தர்ம சங்கடமாகி விட்டது.
விசாரித்தால்.........
கஷ்டப்பட்டு படிக்க வச்சேன். எம்டெக்
படித்து முடித்துவிட்டு யாரோ ஒரு பையனுடன் ஓடி விட்டாள்....இப்ப எங்க இருக்கிறாள்
என்றே தெரியவில்லை. கண்ணீரைத்துடைத்தப்படி அவள் செத்துட்டானு
நினைச்சுக்கிட்டோம்...என்றார் அந்த விவசாயி.....அவருக்கு நான் எப்படி ஆறுதல்
சொல்வது???
...................................................................................................
நல்ல குடும்பம். அப்பா அரசாங்க உத்யோகம்
ஏதும் இல்லை.... அவர் இறந்து நான்கு ஆண்டுகள் ஆகிறது. அம்மா அரசாங்கவேலை. ஒரே
பெண்...பிடெக் இறுதி ஆண்டு தேர்வு இன்னும் நான்கு நாட்களில்... சென்னையில் உறவினர்
கம்பெனியில் சொல்லி....எக்ஸாம் முடித்தவுடன் இருபதாயிரம் சம்பளத்தில் ஜாயின்
பன்னட்டும் அப்புறம் எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன் அப்பா இல்லாத பிள்ளையாச்சே
என்று வாக்குறுதி அளித்திருக்கிறார். அம்மா...... நான் ஹால் டிக்கெட் வாங்கிவரப்போகிறேன்
என்று சென்றவள் மாலை ஆகியும் வீடு திரும்பவில்லை. என்னாச்சோ ஏதாச்சோ என்று
பதறியவர்களுக்கு அந்த அதிர்ச்சி காத்திருந்தது. ஒருவனுடன்ஓடிவிட்டாள்....காவல் நிலையத்தில்
சொல்லி தேடிப்பார்த்ததில் மகள் கிடைத்துவிட்டாள் எவனோ ஒருவனின் மனைவியாக....ஏதோ
வெளியூரில் இருக்கிறோம் நாளைக்கு வருகிறோம் என்று நேராக காவல் நிலையத்தில் ஆஜராகியிருக்கிறார்கள்.
பேசிப்பார்த்து இருக்கிறார்கள். அதிகம்
பேசியது அந்தப்பெண்தானாம் நான் மேஜர். எனக்கு எல்லாம் தெரியும்.உற்றார் உறவினர்கள்
முன்னிலையில் எல்லோரையும் தூக்கியெரிந்துப்பேசி...
தரையில் புரண்டு அழும் அப்படி படிக்க
வைத்தேன் இப்படி கஷ்டப்பட்டு படிக்க வத்தேன் என்ற அம்மாவைப்பார்த்து படிக்க வைத்தது
உங்க கடமை என்றாளாம்.???
கவனிக்க இறுதித்தேர்வு எழுதவில்லை.
ஒன்றும் செய்யமுடியாமல் தாய்..... உறவினர்கள்....
வீடு திரும்ப....
நான்கு மாதங்கள்...ஓடியது...
ஒருநாள் மகள் வாசலில் வந்து நிற்கிறாள்.எனக்கு
அவனுடன் வாழமுடியவில்லை அவனுக்குஏற்கனவே திருமணம் நடந்திருக்கிறது. எனக்கு டைவர்ஸ்
வாங்கிக்கொடுங்கள்...... ???.
ஊரையே காலிச்செய்துக்கொண்டு மகளை
அழைத்துக்கொண்டு மாற்றல் வாங்கிக்கொண்டு இப்ப யாரும் அறிமுகம் இல்லாத எதோ ஒரு
மூளையில் உறவினர் அனைவரின் கேலிப்பார்வைக்கு இடையில்...வாழ்க்கை.
..................................................................................
மூன்றாமவளும் இப்படித்தான்..சுருக்கமாக. பெண் வசதியான குடும்பம்
..........கார் எடுத்து வந்தவனை பணக்காரன்
என நம்பி...... பிஎஸ்ஸி நர்சிங் படிப்பு பாதியிலேயே...???..... அவனுடன் ஓடி
பிள்ளைகள் பெற்று இன்று வாடகை வீட்டில் அந்த குடிகார....பையனுடன் கேள்விக்குறியாய்
நிற்கும் அபலைப்பெண்ணாகிவிட்டாள்.
.........................................
ஆயிரம் ஆயிரம் கனவுகளைத்தாங்கி படிக்க
வைக்கும் பெற்றோர்களுக்கு கிடைக்கும்
பரிசு.........???
யார் மேல் தவறு ???
பெற்றோர்கள் மேலா? பிள்ளைகள் மேலா?
அறிவுரைகள் யாருக்கும் பிடிப்பதில்லை.
ஆதலால்.....
படிக்கும் பெண்களே ! புரிந்ததா?
பெண்களே! நீங்கள் கொஞ்சம் பெற்றோர்களின் மனதையும்
பெற்றோர்களே! கொஞ்சம் பிள்ளைகளின் மனதையும்
படிங்க
சொல்ல வேற ஒன்றும் இல்லை.
0000000000000000000000000000000000000000000
இதனை கதையாக மாற்ற கீழுள்ளதை சேர்த்து படிக்கவும்.
இப்படி லெக்ச்சரர் சொன்னதைக்கேட்டு ஓ! போட்டது ஒரு பட்டாளம். ....போங்க மேடம் காதலில் ஜெயிச்ச கதை எதையுமே சொல்ல மாட்டறீங்க... இந்த சென்டிமெண்ட் கதையெல்லாம் ரொம்ப போர் அடிக்குது....
தலையில் அடித்துக்கொண்டு அடுத்த வகுப்பிற்க்கு செல்ல ஆயத்தமானாள் பேராசிரியை ஆஷா.
0000000000000000000000000000000000000000000
இதனை கதையாக மாற்ற கீழுள்ளதை சேர்த்து படிக்கவும்.
இப்படி லெக்ச்சரர் சொன்னதைக்கேட்டு ஓ! போட்டது ஒரு பட்டாளம். ....போங்க மேடம் காதலில் ஜெயிச்ச கதை எதையுமே சொல்ல மாட்டறீங்க... இந்த சென்டிமெண்ட் கதையெல்லாம் ரொம்ப போர் அடிக்குது....
தலையில் அடித்துக்கொண்டு அடுத்த வகுப்பிற்க்கு செல்ல ஆயத்தமானாள் பேராசிரியை ஆஷா.
( 2ன்1 உண்மையானதும் கதையும்)
இதற்கு முதல் காரணம் பெற்றோர்கள் தான்... கண்காணிப்பு சரியில்லை...
பதிலளிநீக்குமுடிவில் // இந்த சென்டிமெண்ட் கதை // யதார்த்தமான உண்மை...
தமிழ்மணம் இணைத்து விட்டேன்... +1 நன்றி...
கண்ணுக்கு தெரிந்து இவைகள்:தெரியாமல் எத்தனை எத்தனை ஏமாற்றங்களோ.....கருத்திற்கும் இணைப்பிற்கும் மிக்க நன்றிகள் ஐயா.
நீக்குபெத்தவங்க சரியில்லைன்னு ஒத்தை வரியில் முடிச்சுட்டு போய்க்கிட்டே இருப்பாங்க இத்தலைமுறையினர்
பதிலளிநீக்குஆமாங்க இன்னும் போகப்போக எதிர்காலம் என்ன ஆகுமோ?கருத்துரைக்கு மிக்க நன்றிங்க மேடம்.
நீக்குசுய காலில் நிற்கட்டும் என்று கஷ்டப் பட்டு படிக்க வைத்தால் ,சிந்திக்காமல் இப்படி தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்கிறார்களே!
பதிலளிநீக்குத ம 3
பாவம். பின்பு உணர்கிறார்கள் என்ன செய்வது?
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குகாதல் வந்தால் கண்னை மூடிவிடும் தாங்கள் செய்வதுதான் சரி என்ற உணர்வு மேல் ஓங்கும் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கண்போன பின்னே சூரியநமஸ்காரம் செய்யமுடியுமா ? எல்லாம் பருவக்கோளாறு.
பதிலளிநீக்குKillergee
www.killergee.blogspot.com
kudumba kastatha ninaiththu paarththu amma appaavirkku uthaviyaa irukka pen pillaikku kalyaaname seiyaama thiyaagi aakkura petroor unde.
பதிலளிநீக்கு